தத்துவ ஞானயோகமந்திராதி

கணபதி வணக்கம்.

      ஐங்கரத்தோன் யானைமுகன் அங்குசத்தா னவனிரண்டு

      பங்கயமா மலரடியைப் பணிந்துநிதம் போற்றிடுவாம்.

 

குரு வணக்கம்.

 

      பிரணவ மந்திரப் பெரும்பொரு ளுரைத்த

      சரஹண பவதினனுஞ் சர்க்குரு வாழ்க.

 

      சிந்தையி லையந் தெளிந்திட வமர்ந்த

      தந்திர குருவின் றாளிணை போற்றி.

 

      குரு பிரமம் குருவிஷணம் குருதேவோ மஹேஸ்வரம்

      குருசாக்ஷாத்காரம் பரப்பிரம தஸ்மேஷ ஶ்ரீ குருவே நம:

 

தெய்வ வணக்கம்.

 

      வானாகி வாய்வாகி அங்கி யாகி மழையாகி மண்ணாகிப் புவனமாகிக்,

      கானாகிக் கடலாகில் கதிரிந் தாகிக் கருதுசரா சரபேதா பேதமாகி,

      வூனாகி வுயிராகி வுயிர்க்குயிரு மாகி வுருவருவ மாகி மறை தேடிக்காணா,

தானாகி அங்குமிங்கு மெங்குந் தங்குந்தற்பரத்தின் பொற்பதத்தைத்

                                                      தலைமேற் கொள்வாம்.

 

நூலாசிரியர்பேரும் அவையடக்கமும்.

 

      முன்னமியற்றிய சித்திமுத்திக்குரிய வாய்மைகளடங்கும் உண்மைப்பொருள் விளக்கம், எக்காலக்கண்ணி, பேரறிவானந்தப் பேரொளியென்னு ஞானானந்த விளக்கமெனு நூல்களுக்கு ஆசிரியரும், தொண்ட, மண்டல்ந் துளுவ வேளாளமரபினிலுதித்தவருமான செங்கற்பட்டு நாராயணசாமி முதலியாராலிந்த ஒர்மொழி பிரணவபஞ்சாக்ஷராதிகளடங்கும் தத்துவஞானயோக மந்திராதிவிளக்கம் என்னு நூலு மியற்றப்பட்டது. இதிலேதேனும் பிழையுளதேல் பொறுப்பது பெரியோர்களின் கடமையே.

 

பொருள் வணக்கம்.

 

                அகண்ட பரிபூரண ஆதிமத்தியாந்தரகித சின்மய தேஜோன்மயமாயும், தேசிகமூர்த்தி வடிவாயும், சத்துசித்து ஆனந்தம் சச்சிதானந்தமாயும், நித்திய நிர்மல நிரஞ்சன நிராமயமாயும், அணுவிக்கணுவாயும், உயிர்க்குயிராயும், மகத்துக்குமகத்தாயும், மனவாக்குக்கெட்டாததாயும், பதியாயும், கருணாநிதியாயும், பஞ்சகிருத்ய கர்த்தாவாயும், சமயக்கோட்பாடுகளுக்குத்தக்க மூர்த்தியாயும், இன்னமனந்த மூர்த்தியாயும் விளங்கா நின்ற பிரமப்பொருள் ஒன்றனையே சிந்தையில் வைப்பாம்.

      பிரமம் சலிக்கின்றதுபோலத் தோன்றுமென்றும், சர்வவியாபியான அந்தப்பிரமமானது உண்மையில் சலிக்கிறதில்லையென்றூம், அது அஞ்ஞானிகளாகிய அசுரப்பிரகிருதிகளுக்குத் தூரத்திலும், ஞானிகளாகிய தேவப்பிரகிருதிகளுக்குத் சமீபத்திலுமிருக்கிறதென்றும், அந்தப்பிரமம் இந்தப்பிரபஞ்சத்துக்குள்ளேயும் வெளியேயுமிருக்கிறதென்றுங் கூறப்படும்.

                “ததேஜதி தன்னைஜதி தத்தூரே தத்வந்திகே: |”

      தந்த ரஸ்ய ஸர்வஸ்யா ஸயபாஹ்யத: ||

 

என்று மந்திரங்கூறுகின்றது. – (ஶ்ரீ ராமாநுஜபாஷியம்.)

பிரமம்

      ‘ஓம் என்கிற உத்கிருஷ்ணமான ஏகாக்ஷரம் பிரக்ருதி சம்பந்தமில்லாத ஆத்மஸ்வரூபமெனப்படும்.”

                “ஓமித் யேகாக்ஷரம் பிரஹமம்

      அக்ஷரம் பிரஹம பிரஹ்மம்”    - பகவத்கீதையிலறிக.

 

      சத்தியம் ஞானம் அனந்தம் ஆனந்தமென்னு மிலக்கணவடிவாயுள்ள பரவஸ்துவாகிய அந்த சுத்தசைதன்னிய நிர்மலப்பிரமபொருளை பிரத்யக்ஷம், அநுமானம், உவமானம், சத்தமெனும் பிரமாணங்களால் நிச்சயித்தல் கூடாதென்றும், அது குற்றமுள்ள குணவிசேஷணங்களைப் பொருந்தாமலிருத்தலால் சத்தரூபமான வேதத்துக்கும் வாக்குக்கு மெட்டாதென்றும், வேத சுருதி வாக்கியங்களுக்கு அந்தப் பொருள் அகோசரமும், கோசரமுமாமென்றும், சத்தரூபத்தாலறிவிக்காமல் அருத்தரூபக்தா லந்த நாதாதீதவஸ்துவை சுருதிகளறிவிக்குமென்றும், வேத மகாவாக்கிய விசாரத்தாலந்தப்பொருளை வேதமானது காட்டாமற்காடுமென்றும், சொல்லாமற் சொல்லுமென்று முரைக்கப்படும்.

      பிரமக்கிபானம் விளங்கவும், வஸ்து அறிவிற்கவதானமாகவும், சீவன் முத்திநிலைபெறவும், வேத சுருதிகளுரைக்கும் விதிபால் குணபரியாய விலக்கு நாமங்களில் ஆத்மா, ஏகம், சத்தியம், சாக்ஷி, சாந்தம், சுத்தம், சூக்குமம், சோதி, தத்துவம், திருக்கு, துரியம், நித்தியம், நிர்மலம், நிஷ்களம், நிராமயம், நிரங்கனம், நிர்க்குணம், பரப்பிரமம், பரமார்த்தம், பூரணம், போதம், முத்தம் எனு நாமங்களும், அகண்டம், அகணு, அசடம், அசரீரம், அசலம், அத்துவிதம், அநாதி, அநாமயம், அபபிரமேயம், அமிர்தம், அவிகாரம் என்னு நாமங்களும், இன்ன மனதை நாமங்களும், அந்த நிர்க்குணப்பிரமத்தின் குணங்களல்லனவாயினும், அந்த நாமங்களின் அருத்தபடி சிந்திக்கில் அக்குணமிறந்து குணாதீதம் வெளிப்பட்டு பிரமஸ்வரூபமேயாமென்றுஞ் சொல்லப்படும். பிரமத்தை யறிவிக்கும்படியானது பிரம வித்தையெனவும், பிரமக்கியானத்துக்குக் காரணம் உபதேச மெனவும்படும்.

      (உதாரணம்.) “சுருதியே சிவாகமங்களே யுங்களரீற் சொல்லு பொருதனிப் பொருளவை யீதென்னவாயுண்டோ” என்றும், “நித்தியமாய் நிர்மலமாய் நிஷ்களமாய் நிராமயமாய் நிறைவாய் நீங்காச், சுத்தமுமாய்த் தூரமுமாய்ச் சமீபமுமாய்த் துரியநிறை சுடரா யெல்லாம், வைத்திருந்த தாரகமா யானந்த மயமாகி மனவாக் கெட்டாச், சித்துருவாய் நின்றஒன்றைச் சுகாரம்பப் பெருவெளியைச் சிந்தை செய்வாம்” என்றும், “நிர்குண நிராமய நிரஞ்சன நிராலம்ப நிர்விஷ்ய கைவல்யமாய், நிஷ்கள வசங்க சஞ்சலரகித நிர்வசன நிர்த்தொந்த நித்தமுத்த” என்றும் தாயுமானசுவாமிகளும், “நித்தியம் பூரணம் ஏகம் பரமார்த்தம் பரப்பிரமம் நிதானஞ் சாந்தம், சத்தியம் கேவலம் துரியம் சமந்திருக்குங் கூடஸ்தன் சாக்ஷி போதம், சுத்த மிலக்கியம் சனாதனம் சீவன் தத்துவம்விண் சோதி யான்மா” என்றும், “அசல நிரஞ்சனம் அமிர்தம் அப்பிரமேயம் விமலம் வசனாதீதம் அசரீர மவிகாரம் அத்துவிதம்” என்றும் கைவல்யநவநீதத்திலும், “ஆணல்லன் பெண்ணல்லன் அலியுமல்லன், காணலுமாகா னுளனல்ல நில்லன்” என்று சடகோபஸ்வாமிகள் நூலிலுங்காண்க.

      வேதங்களை வாசிக்கிறதினாலும், புத்தி சாதுர்யத்தினாலும் அதிக சிரவணபலத்தினாலுமட்டுமே ஆத்மலாபம் கிடைக்கமாட்டாதென்க. யாவனொருவ னதை யறியவேண்டுமென்று தீவிரதர முமுட்சுவாய்த்தேடுகிறானோ அவனால் தான் ஆத்மா அடையக்கூடியது. அவனுக்கு ஆத்மாவே தன் ஸ்வரூபத்தோடு பிரான்னமாகிற தெனப்படும்.

                “நாயமாத்மா ப்ரவசனேன லப்யோந மேதநா பஸுக்ருதே

      னமமே வைஷ்வ்ருணதேதேனல ப்யஸ்தஸ் மைஷஆத்மா

      வ்ருணதேதனும் ஸ்வாம்” என்று – கடோபநிஷத்து.

 

வேதோபநிஷத்துகள் கூறும் பிரமஸ்வரூப மகிமை.

      இந்த லோகத்தில் பிரமஸ்வரூபந்தெரிந்துக்கொண்டவன் அந்தஸ்வரூபமே யாகிறானென்றும், பிரமஸ்வரூபந்தெரிந்துக்கொள்ளாதவனுக்கு நாசமானது சம்பவிக்கிறதென்றும், பிரமஸ்வரூபமில்லையென்று வியாமோக முண்டாகிறதென்றும், ஞானிகள் அத்விதயமான ஆத்மாவை யறிந்துக் கொண்டு மரணமடைந்தபின்பு புநர்ஜ்நநமில்லாத மோட்சத்தைப் பெற்றுப் பரமானந்தத்தை யடைகிறாகளென்றும், வேதோபநிஷத்து முதலியவைகள் முறையிடுகின்றன.

      தேவர்களறியும் பொருட்டு அவர்கள் க்ஷேமத்திற்காக அவர்களெதிரில் தேடூஜாமயமாய் விளங்கினின்ற ஒர் பெரிய பக்ஷாஸ்வரூபத்தை யின்னதென்றறியாமல் அந்த ஸவரூபமின்னதென்று தெரிந்துக்கொள்ளவேணுமென்று அக்நி பகவானுக்குத் தேவர்கள் சொல்ல, அதை யறிய அக்நிபகவா னந்த ஸ்வரூப்த்தினருகிற்செல்ல, நீ யாரென்று அந்த ஸ்வரூபம் கேழ்க்க, அதற்க்கு அக்நிபகவான் நான் ஜாதவேதஸ்யென்றும், அக்நியென்றுஞ் சொல்ல, ஓய் அக்நியே வுனக்கென்ன சாமர்த்தியமிருக்கின்ற தென்று அந்த ஸ்வரூபம் கேழ்க்க, அதர்க்கு அக்நிபகவான் தனக்கு இந்தப்பூமியிலுள்ள ஸ்தாவரசங்கமமான சமஸ்தஸ்துக்களையும் பஸ்பமாகச் செய்ய சக்தியிண்டென்ன, அப்பொழுது அக்நிபகவானுக்கெதிரில் ஓர் புல்லைப்போட்டு இந்தப்புல்லை சாம்பலாகப்பண்ணு மென்று அந்த ஸ்வரூபம் சொல்ல, அந்தப்புல்லை தகிக்கக்கருதி தன்னாலான வரையில் அக்நிபகவான் பிரயத்தனப்பட்டும் சாத்தியப்படாமல் தேவர்களைப்பார்த்து ஓ தேவர்களே அந்த ஸ்வரூபத்தின் மகிமை யின்னதென்றறிந்து சொல்ல சக்தியற்றவனாயிருக்கிறே னென்றார். பின்பு தேவர்கள் வாயுபகவானை அந்த ஸ்வரூப மின்னதென்ற்றியும் படி சொல்லி, அந்த வாயுபகவானந்த ஸ்வரூபத்தினருகிற் செல்ல, அந்த ஸ்வரூபமானது நீ யாரென்று வாயுபகவானைக்கேழ்க்க, அதற்கு வாயுபகவான் நான் பிரசித்தமான வாயு ஆகாயத்திலுஞ் சஞ்சரிக்கிறவனென்ன, அந்த வாயுபகவானுக்கெதிரில் அந்தப்புல்லைப்போட்டு அதை கிரகித்துக் கொள்ளென்று அந்த ஸ்வரூபஞ் சொல்ல, தன்னாலான வரையிலந்தப்புல்லை கிரகிக்க வாயு பகவான் பிரயத்தினப்பட்டுஞ் சாத்தியப்படாமல் தேவர்களைப்பார்த்து அந்த ஸ்வரூபமின்னதென்றறிய சாத்தியமில்லை யென்றார். இந்தப்படியே பிரம விஷ்ணு ருத்திரன் இந்திரன் முதலாயினோரும் அந்த ஸ்வரூபத்தை யின்னதென்றறியாதவர்க ளாயினார்கள். யக்ஷர ஸ்வரூபமறைந்து விட்டது. தேஜோன்மயமாய் அப்பொழுது அங்குவிளங்கினின்று உமாதேவியைப்பார்த்து ஓ பார்வதி அந்த யக்ஷஸ்வரூபம்யாதென்று இந்திரன் கேழ்க்க அப்படி யக்ஷஸ்வரூபமாக விளங்கியதே பரப்பிரமப்பொருளென்று பார்வதிதேவி சொல்ல, அதைக்கேட்டு இந்திரன் முதலிய தேவர்க்ளெல்லாம் பரப்பிரமத்தின் ஸ்வரூபத்தையும் சக்தியையும் வும்மாலல்லவோ இன்றறிந்தோ மென்று உமா தேவி யைக்கொண்டாடி, மின்னலையொத்த தேஜசான இந்த பரப்பிரமஸ்வரூபம் அதிசீக்கிரமாகத் தோன்றிமறையுமென்று கூறினார்களாம். இது பிரமப்பிரதிபாதக வுபநிஷத்தென்னு முபதேசமெனப்படுமென்க.

      தபசு, பஞ்சேந்திரிபமடக்குதல், கர்மமுதலியவையிபற்றுதல், வேதம் வேதாங்கங்கள, சத்தியம், சாந்தம், தயை முதலிய வனுஷ்டிப்புகளாகிய விவையெல்லாம் பிரமத்தை யறிந்தடைவதற்குக் காரணமானவைக னெனப்படும்.

      ஞானம் – பேரறிவு, ஞானத்திற்கிடமாயுள்ளது ஆன்மா. ஞானம் வீடு பேற்றிறகேது. மாயாகாரி மாகிய கருமனைத்தும் ஞானவாயிலாக வீடுபேற்றிற்குக் காரணமாக வதல்லது நேரேகாரணமாகமாட்டா தெனப்படும்.

      கருமமாவது, எழும்பல், வீழ்தல், வளைதல், குனிதல், நிமிர்தல், நடத்தல், முதலிய தொழில்களாம். தருமம் – பந்தம் அதாவது பிடிப்பு, பந்த நீக்கமே முத்திக்குச் சிறந்த காரணமெனப்படும். ஞானத்தினாலேயே முத்தி யென்று வேதகம்புநாணாதிகளெலாங் கூறுகின்றன.

      “நகர்மணா” என்று சுருதியிலும், “ஞான மேவ மோக்ஷஹா” என்று வேதத்திலும் கூறுகின்றன. “ஞானத்தால் வீடென்றே நான்மறைகள் புராண நல்ல வாகமஞ் சொல்ல” என்றும், “கிரியையென பருவுமவை யாவும் ஞானங் கிடைதற்கு நிமித்தமெனக் கிடைக்கும்” என்றும் சிவஞானசித்தியாரிலும், “நற்சார்பில் வாதுசித்து ஞானத்தை நண்ணுதலால், “கற்றார் சூழ் சொல்லுமாங் கண்டு” என்று சிவஞானபோதத்துலுமறிக.

பரனாதிகளிலக்கணம்.

      பரம், பரன், பரை, பரைகுடிலை, பரநாதம், பரவிந்துவென ஆதாரம் ஆறெனப்படும். பரமாவது – அண்டம், வெளி (உடல், கடவுள், கவசம் எனவும்படும்) பரனாவது – சிவன், (ஞானம், அறிவு) பரையாவது – சத்தி (பார்வதி, கிரியை, மனம்). பரைகுடிலையாவது – மாயை. பரநாதமாவது – சூரியன் வலதுநாசி. பரவிந்தாவது – சந்திரன் இடதுநாசி.

      பரன்எழுத்து – ஹரீம், பரைஎழுத்து – ஓங்காரம், பரைகுடிலையெழுத்து – ரீங்காரம், பரவிந்து யெழுத்து - ஶ்ரீங்காரம். அந்த ஶ்ரீங்காரத்திலே யகாரம் சதாசிவ னெழுத்து, அந்த யகாரத்திலே வகாரம் மஹேஸ்வர னெழுத்து, அந்த வகாரத்திலே சிகாரம் ருத்திரனெழுத்து, அந்த சிகாரத்திலே மகாரம் விஷ்ணு யெழுத்து, அந்தன் மகாரத்திலே நகாரம் பிரமனெழுத்து, அந்த நகாரத்திலே சர்வான்மாக்களும் அவ்வான்மாக்களிலே வான், வளி, தீ, மண்ணும், அம்மண்ணிலே அனல் முதலியவைகளும், சப்ததாதுக்களும், நால்வகையோனி, எழுவகைத்தோற்றம் எண்பத்து நான்கு நூறாயிரஞ் சீவபேதங்களுந் தோன்றினவாம். தோன்றினமுறையே பரவெளி வீட்டுக்குள் யாவுமொடுக்க மாமெனப்படும்.

      பரத்துநிலை – சிவப்பாழ் சீவப்பாழ் பரப்பாழென்னு முப்பாழுங்கடந்து பெரும்பாழாகிய வெளியிலே ஆண் பெண் அலியென்னு மூன்றிற்கப்பாற்பட்ட விசுவப்பிரகாசமாய் விளங்காநின்ற அந்தப்பரமாத்மனுடைய ஸ்வரூபங் காணக் கிடைத்தலரிதினுமரிதாம். அந்தபரமாத்மனுடைய நிலை யொருவராலும் பகர முடியாதெனவும், இதுவே அழியாப்பதமெனவும், தானதுவாக நிற்கத் தற்பரமாகுவ ரெனவும் படும்.

      உ – ம். “பரத்துநிலை யொருவராற் பகரொணாதே” என்றும், “எங்குந்தானாய் நடுவெழுந்தபரத்து நிலை நானுமறியேனே” என்றும், இன்னமொருவருங் கண்டதில்லை யெம்பிரானிருந்தவிடம்” என்றும் ஶ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் வுடலறிவிளக்கத்திலும், “விண்ணொளியாம் அம்பரமாம் ஒம் அவ்வும் உவ்வும் விதித்தபர மொருவருக்குங் கிட்டாதப்பா” என்று அகஸ்தியமாமுனிவர் நூலினும் “துரிய நடு வூடிருந்த பெரியபொரு ளியாததனைத் தொழுதல் செய்வாம்” என்றும், “சுகாரம்பப் பெருவெளியைச் சிந்தை செய்வாம்” என்றும், “தீதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச் சிந்தைசெய்வாம்” என்றும் தாயுமான ஸ்வாமிகள் நூலிலுமறிக.

தராதலவுற்பத்தி.

      பரமாத்மன் தராதலும் படைக்கவேண்டி பரமாகிய வெளியே வீடாகக்கொண்டு அந்த வீட்டுக்குள் பரனும் பரையுங் கூடின வவதரம் பரைகுடிலையாகிய சுத்தமாயையாம். அந்த சுத்தமாயையிலே நாதமும், அந்த நாதத்திலே விந்துவும், அந்த விந்துவிலே சதாசிவதேவரும், அந்த சதாசிவரிடத்திலே மஹேஸ்வரரும், அந்த மஹேஸ்வரரிடத்திலே சுத்தவித்தையுமாகத் தோன்றி பஞ்சகிருத்யங்களுக் கேதுவாகிய சுத்தம், ஈஸ்வரன், சாதாக்கியம், சத்தி, சிவம் எனும் ஐந்து சுத்த தத்துவங்களும், பிரம, விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன், சதாசிவனென்னும் பஞ்சமூர்த்திகளும், பிரணவாதி மந்திரங்களும், பூதாத்மாக்களும் தோன்றினவாம்.

      விந்து சத்தியிலே சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி யென்னு நாலு வாக்குகளும், ஐமபத்தோரக்ஷரங்களும், சப்தகோடி மகாமந்திரங்களும், எண்பத்தொரு பதங்களும், இரு நூற்றிருபத்தினாலு புவனங்களும், சகல சாஸ்திரங்களும், ஆன்மாக்களுக்குத் தனுகரணபுவன போகங்களும், சாலோக, சாமீப, சாரூபமென்னும் பதமுத்திகளும், நிவ்ருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திபாதீதமென்னும் பஞ்சகலைகளுந் தோன்றினவாம்.

      உலகிற்கு முதற்காரணமாகிய அசுத்த மாயையிலே ஆசைமிகுதற்குக் காரணமான காலம், நியதி, கலை, வித்தை, இராகம், புருடன், மாயையென்னும் வித்தியாதத்துவங்களேழும், கலையிலே முலப்பிரகிருதி, சத்துவ ரஜஸ் தமஸென்னு முக்குணங்களும், அக்குணங்கள் தோன்றாவிடமான அவ்யக்தத்திலே சித்தமும், புத்தியும், அந்த புத்தியிலே தைசத வைகரி பெளதாதிகமென்னு மூன்றகங்காரங்களும், தைசதவகங்காரத்திலே சத்துவகுணமும், மனமும், சோத்திரம், தொக்கு, சட்சு, சிங்குவை, ஆக்ராணம் என்னும் ஞானேந்திரியங்களைந்தும், வைகரி அகங்காரத்திலே ரஜோகுணமும், வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபக்த மென்னும் கன்மேந்திரியங்களைந்தும், வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனாதமென்னுங் கன்மேந்திரிய விஷயங்களைந்தும், பெளதாதிகங்காரத்திலே தமோகுணமும், ஞானேந்திரிய விஷயங்களான சத்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தமென்னுமைந்து தன்மாத்திரைகளும், சகதத்திலே ஆகாயமும், ஸ்பரிசத்திலே வாயுவும், ரூபத்திலே தேயுவும், ரதத்திலே அப்புவும், கந்தத்திலே மண்ணுவுமாக பஞ்சபூதங்களுந்தோன்றினவாம். ஒடுக்கம் தோன்றின முறையேயா மென்க.

      நிவ்ருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்தியாதீதமென்னும் பஞ்சகலைகளில், நிவ்ருத்திகலை முழங்காலும் பாதமும், பிரதிட்டாகலை குப்பமும், வித்தியாகலை மார்பும், சாந்திகலை திருமுகமும், சாந்திபாதீதகலை திருமுடியுமாகச் சொல்லப்படும். கலைகளிற்பொருந்தி நிற்பது; - நிவ்ருத்திகலையிலே இரண்டு மந்திரம், இருபத்தெட்டு பதம், ஓரக்கரம், நூற்றெட்டு புவனம், கத்துவம் பிரதீவி, அக்ஷரம் அகாரம், அதிதெய்வம் பிரமாவாம் பிரதிட்டாகலையிலே இரண்டு மந்திரம், இருபத்தொரு பதம், இருபத்தினாலு அக்கரம், ஐம்பத்தாறு புவனம், இருபத்திமூன்று தத்துவம், அக்ஷரம், உகாரம், அதிதெய்வம் விஷ்ணுவாம். வித்தியாகலையிலே இரண்டு மந்திரம், இருபதுபதம், ஏழுக்கரம், இருபத்தேழு புவனம், ஏழு தத்துவம், அககரம் மகாரம் அதிதெயவம் வுருத்திரனாம். சாந்தியாகலையிலே இரண்டு மந்திரம், பதினொரு பதம், மூன்றக்கரம், பதினெட்டு புவனம், மூன்று தத்துவம்,  அக்கரம் விந்து, அதிதெய்வம் மஹேஸ்வரனாம். சாந்தியா தீதகலையிலே, மூன்று மந்திரம், ஒரு பதம், பதினாறு அக்கரங்கள், பதினைந்து புவனம், இரண்டு தத்துவம், அக்ஷரம் நாதம், அதிதெய்வம் சதாசிவனுமாம்.

      உ–ம். மாயையிற் காலமொடு நியதிபின்கலாதி தோன்றும் என்று சிவஞானசித்தியாரிலும், “தத்துவமாறாது தன்மனுவேழ்கோடி, மெய்த்தகுவன்னமைம்பானொன்று மேதினி, ஒத்திரு நூற்றிருபானான் கென்பா னொன்று, வைத்தபதங் கலைபோரைந்தும் வந்ததே” என்றும், நாடியமண்டலமூன்று நலந்தெரிந் தொடுமவ ரோடுள் ளிருபத்தைந்தும், கூடுவர் கூடி குருவழியே சென்று தேடிய பின்னர்த் திகைத்திருந்தார்களே” என்றும் திருமந்திரத்திலுமறிக.

ஆன்மாக்கள் பரகதியடையும் மார்க்கம்.

      ஆன்மாக்கள் பரகதியடைவதற்குக் காரணமாக மந்திரபத வன்ன புவனதத்துவகலைகளென்னும் அத்துவாமார்க்கம் ஆறெனப்படும். மந்திரமாவது – சோரிரக்தம், பதமாவது – நரம்பு, வன்னமாவது – தோல், புவனமாவது – ரோமம், தத்துவங்கள் – என்பும் தசையுமாகிய தேகதத்துவங்கள். கலைகள் – நிவ்ருத்தியாதி ஐந்து கலைகள். இவ்வாறுக்குஞ் சத்தியே துணைக்காரண மெனப்படும். இவ்வாறத்துவாவும் பரமேஸ்வரனுக்குத் திருமேனியான தென்க. சத்தியாவது, தனியே ஒருமுதலல்ல சத்தனாகிய பரமேஸ்வரனுக்குச் சமவாயமானதென்றும், சத்தனாகிய பரமேஸ்வரன் எத்திறனிற்பானத்திலும் அவளுநிற்பளென்றுஞ் சொல்லப்படும்.

      அத்துவாசுத்தி யென்றது – கன்மங்களை நசிப்பித்த லெனப்படும்.

      உ-ம். “அத்துவா வெல்லா மடங்கச் சோதித்தபடி, சித்துருவாய் நின்றார் தெளிவறிவ தெந்நாளோ” என்று தாயுமானஸ்வாமிகள் பாடலிலும், “அத்துவா மூர்த்தியாக வறைகுவ தென்னையென்னின், நித்தனாய் நிறைந்தவற்றி நீங்கிடா நிலைமையானுஞ், சித்துடன் சித்துக்கெல்லான், சேட்டித்த னாகலானும், வைத்ததா மத்துவாவும் வடிவென மறைகளெல்லாம்” என்றும், “வழுவிலாவழியறா மந்திரங்கள் புவனங்கடத்துவங்கள் கலைசத்தியின்கண் சத்தி சிவன் கண்ணாம்” என்றும், “அவையவங்கலைகளாகு மென்ற பாடத்தில் சிவமுயர் சதாசிவர்க்குச் சிறந்தவாறுறுப்புந்தானே” என்றும் சிவஞானசித்தியாரிலுங்காண்க.

பரமேஸ்வரன் பஞ்சகிருத்ய தாண்டவம்.

      ஆன்மாக்களறிவிற்குப் புலப்படும் பொருட்டு சுத்தமாயையிலே பரமேஸ்வரம் சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், மஹேஸ்வரன், உருத்திரன், மால், அயன், என்னுமொன்பது விதமான திருமேனியை வொன்றிலொன்றாகக் கொண்டு பஞ்சகிருத்யபரமானந்தத் தாண்டவம் நடித்தாரெனப்படும். அந்தத் திருமேனியைப் பிரித்தறியில் நிஷ்களமாகிய அருவம், சிவம், சத்தி, நாதம், விந்துவென நான்கு, சகளமாகிய உருவம், பிரம, விஷ்ணு, ருத்திரன், மஹேஸ்வரன் என நான்கு, நிஷ்கள சகளமாகிய அருவாருவம், அதாவது உபயரூபம் சதாசிவமூர்த்தி ஒன்றுமாகத் திருமேனி வொன்பதென்க. சகளம் – மரம் போலவும், நிஷ்களம் – மரத்தினிழல்போலவும், நிஷ்கள சகளம் – பூவும் மணமும் போலாமென்க.

      அருவத்திருமேனி சிவயோகிகள் தியானித்தற் பொருட்டென்றும், உருவத்திருமேனி தாமராதிலோகங்களிலும் காட்ட முதலியவற்றினாலும் திருமேனி கொண்டு பூசாதி உச்சவாதிக்கெழுந்தருளி அங்கங்கே ஆன்மாக்களுக்கு அனுக்கிரகஞ்செய்தற்பொருட்டென்றும், அருவாருவத் திருமேனியாகிய உபய ரூபமென்னும், சத்தியுஞ்சிவமுங்கூடி மிச்சிரமாயிருக்கிற சிவலிங்கம் தேவர் முதலாயினார் பூசை செய்தமையை ஆகமத்தோதினதென்றும் கூறப்படும். கிருத்யபேதத்தால் சிவம் சத்தி நாதம் விந்து வெனபின்னமாகக் கூறப்பட்டன வென்க.

      பரமேஸ்வரன் அந்த திருமேனி கொண்ட பொழுது பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி யென்னுமைந்து சத்தி களைத்தோன்றுவித்தா ரென்றும், அந்தசத்திகளில் பராசத்தியொன்றுமே பலவாய்திட்டித்துக்கொண்டு சிவத்துக்குச் சத்தியும், மஹேஸ்வரத்துக்கு மஹேரையும், உருத்திரனுக்குக் கவுரியும், விஷ்ணுவுக்கு இலட்சுமியும், பிரமாவுக்குச்சரஸ்வதியுமாக நின்றாவென்க. பராசத்தியொன்றே காரியபேதத்தால் ஐவகைசத்தியாகச் சொல்லப்படுமாம்.

      உ-ம். “ஐந்துநலமிகு தொழிலளொடு நாடகநடிப்பனாதன்” என்றும், “சிவம்சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழுமீச, னுவந்தருளுருத திரன்றான் மாலய னொன்றினொன்றாய், பவந்தரு முருவநாலிங் குருவநா லுபயமொன்றாய், நவந்தரு பேதமேக நாதனே நடிப்பன்” என்றும், “சத்தியாய் விந்து சத்தியாய் மனோன்மணிதானாகி, யொத்துறு மகேசையாகி யுமைதிரு வாணியாகி, வைத்துறுஞ் சிவா திக்கிங்கண் வருஞ் சத்தி யொருத்தியாகு, மெத்திற நிற்பானீச னத்திறமவளு நிற்பல்” என்றும், சிவஞானசித்தியாரிலும், ‘அவனன்றிஐவ ராலாவதொன்றில்லை என்றும், பராசத்தி மாசத்தி பலவகை யாலுந், தராசத்தியாய் நின்ற தன்மையுணரா” என்றும், சுந்தரியந்தரி சிந்துரப்பரிபுரை நாரணியாம், பாலவன்னத்தி இருள் புரையீசி மனோன்மணியென்ன, வருபலவாய் நிற்குமாமதுதானே” என்று திருமூலர் திருமந்திரத்திலும், சகளநிட்களே சைவஸர்வத்ரை, வசமாந்த வாயுச்யமிதிபுரோக்தம், ஸாமரூப்யமூர்த்திதுல்யதா” என்று சிந்திய விசுவசாதாக்ய வசனத்திலும், பஞ்சக்ருத்ய நியம்தாரம் என்று வேதோபநிஷத்திலும், சர்வஜ்ஞபஞ்சகிருத்ய ஸம்பந்தஸ்ஸர்வேச்வர, ஈசாபசுபதி, என்று ஸாமவேதஜாபாலோபநிஷத்திலும், த்யாயம்சதுர் மகாகாரம் பிருதிவிஜயமாப்நுஜாத் என்றும், ஸ்மான்நாராயணம் தேவம்ததோஜலாத்பயம் நாஸ்தி என்றும், யத்ர்யக்ஷயந்து வாதம் ருத்திரம் வஹநிகரஸெளந்தஹ்பதே என்றும், தாரயேகத்ரஸர்வஜ்ஞ்மீச்வரம் வாயுதவ் யோமகோபவேதமரணமந்து வாயோஸ்து என்றும், ஆகாசேவாயுமாரோப்யஹகாரோபரிசங்கரம் பிந்துரூபம் மகாதேவம் வ்யாமாகாரம் சதாசிவம், ஸர்வகாரண காரணம் யத் ரகுத்ரவதிதோவாபு ஸுகம் தபந்தம் ஸதுதே என்றும் யசுர்வேதயோக தத்துவோபநிஷத்திலுமறிக.

வேதம்

      வேதம் – சகலருக்கும் பொது. எந்தசாதியார் அல்லது வருணத்தாருக்கும் தியானமுதிக்கின்றமையால் வேதத்தை யின்னஜாதியாருக்கே உரியதென்று கட்டுபடுத்தகூடாவாம். வேதத்தையுண்டாக்கின தேவதை சப்தத்தைவிட வேறில்லையென்றும், வெளியிடப்படுஞ் சப்தங்களின் தொகுதிகளே வேதமென்றும், சத்தகுணமுடையது ஆகாயம் அது ஒன்றாயும் நித்யமாயும் வியாபகமாயு மிருப்பதென்றும், சத்தமானது – ஒலிவடிவு, எழுத்துவடிவெனவிருவகைத்தென்றும், வாக்கியப் பொருளுணர்ச்சி சத்தத்தாலாயது அதற்குக் காரணஞ்சத்தமென்றும், மிகச்சிறியபொருளானது அணு. அணுத்திரளாவது –அணுக்கூட்டமென்றும், இது மொழிக்குமுதற் காரணமென்றும், எழுத்துகளெல்லாம் அகரத்தை முதலாகவுடையதென்றும், வாக்கியமாவது – பதங்களின் கூட்டமென்றும், பதமாவது – ஆற்றலுடையதென்றும், ஆற்றலாவது – இறைவன்சங்கேதமென்றும், சங்கேதமாவது – தேவர்மொழியென்றும், வேதவாக்கியமிறைவன் வாக்கியமாதலால் எல்லாம் பிரமாணமே என்றும், வுலகத்தின் உரியோனாகிய புருடன்வாய்மொழி பிரமாணமே என்றும், ஏனையத்ப்பிரமாணமென்றுங் கூறப்படும். சாந்தோக்யவுபநிஷத் 6-வது அத்தியாயம் 7-வது பிரபாடகத்திலும், முண்டகோபநிஷத் யோகவாசிட்டம் முமூட்சுவியவகாரம் பிரமாணம் குலாலவ தந்திரத்திலும், முன்னமிபற்றிய உண்மைப்பொருள்விளக்கம் ஞானாந்த விளக்கம் யென்னு நூல்களில் விரிவாயுமறிக.

      உண்மையான வேதம்: -  பரிசுத்தவான்கள் தியானநிலை பெறுங்காலத்தில் ஈஸ்வரக் கிருபையா லப்போதப்போதுண்டாகுமுன் நினையாத வுண்மைகளே வேதமெனப் படுவதாம். இந்த வேதம் அல்ல்து தியானமானது சிலசமயங்களில் தரிசனரூபமாயும், சிலசமயங்களில் சிரவண ரூபமாயும், ஆத்மாவில் விளங்குகின்றமையா லிக்காரணத்தைக் கொண்டே வேதத்தை சுருதியென்றுரைக்கப்படுகின்றனவாம். சுருதியானது – மனனம் அல்லது தியானத்தால் பெறப்படுகிறதினாலே அதை மந்திரமென்றும், இந்தக்கியான முதிக்கப்பெற்றவர்கள் மந்திர திருஷ்டா ரிஷிகளென்று சொல்லப்படுகிறார்களென்றும் கூறப்படும்.

      வேதம் என்னும் பதம் வித்தை யெனப்பொருள்படும். வித்தையானது – பரவித்தை, அபரவித்தையென விருவகைத்தாம். பரவித்தையானது – அழிவற்ற பொருளை யதாவது ஆத்மஸ்வரூபத்தை யறிகிறதென்க. அபரவித்தையானது – இவ்வுலகத்தைப்பற்றியதாம். முடிவில்லாத வேதம் ஆத்மாவின் பொருட்டு பரமாத்மனால் செய்யப்பட்டிருக்கிற தெனப்படும். அந்தப்பரமாத்மனை யறிந்தபின் அந்த வேதம் பிரயோசனமற்றதாய் விடுகிறதென்க. தத்துவ ஞானமடையாத வரையில் தபசு, விரதம், தீர்த்தம், ஜெபம், ஓமம், பூசை முதலியவைகளும், வேதசாஸ்திரங்களுமிருக்கு மென்றும், தத்துவஞானமடைந்த பின் அவைகள் பிரயோசனமற்றதாய் விடுகிறதென்றும், நாலுவேதங்களும், ஆறுவேதாங்கங்களும் அபரவித்தையாமென்றும் கூறப்படும்.

      எல்லாவற்றிற்கு முதனூலென்னும் பேதமற்றதாகிய் வேதம் வேதாகமமெனு மிரண்டில் வேதமானது சர்வத்தையு முலகருக்குப் பொதுவாகச் சொல்லப்பட்டதென்றும், அது சீவ பர ஐக்கியத்தைக் காட்டுவதென்றும், ஆகமம் – சித்தாந்தம் சிறப்பு நூலென்றும்,அ து பதி பசு பாசமார்க்கத்தைக் காட்டுவதென்று முரைக்கப்படும். அனந்த சாகைகளையுடைய வேதத்தை அளவிட்டறிதற்கரிதென்று வேதவியாசபகவான் அதை நாலாகப்பிரித்து விளங்க வருளிச் செய்தன ரெனப்படும். வேதாகமங்களில் விரித்துச்சொன்ன வத்தங்களையெல்லா மறிவதற் கரிதானவைகொண்டு திருவருள் பெற்ற பெரியோரால் பிரித்துத் தெளிவு பெறச் சுருக்கித் தனித்தனி தாமறிந்தவளவில் தங்கள் தங்கள் கருத்துக்க்குதக்கபடி சமயபேதங்களையும், அததற்கேற்ற பொருள்களையுஞ் சாதித்து வேதத்தைப் பின்சென்று சொன்ன சமயிகள் நூலனந்தமெனப்படும். உபவேதங்கள், வேதாங்கங்கள், ஸ்மிருதிகள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள், உபாகமங்கள், புராண வுபபுராணங்கள், இதிகாசங்களெனு மிவையெல்லாம் வேதத்திலிருந்து விரிந்த நூல்களெனப்படும்.

வேதவாக்கியங்களாவன.

      முதல்வேதமாகிய இருக்குவேதவாக்கியம் பிரக்ஞானம் பிரமம். இது பிரக்ஞை ஞானம் பிரமமெனப் பதங்கள் மூன்று. இது பிரக்னையே பிரமமெனப்படும். இரண்டாவதுதான யசுர்வேதவாக்கியம் அகம் பிரமாஸ்மி, இது அகம் பிரமம் அஸ்மிஎனப் பதங்கள் மூன்று, தான் பிரமமாகிறதெனப்படும். மூன்றாவதான சாமவேதவாக்கியம் தத்துவமசி, இது தத் வம் அசி எனப்பதங்கள் மூன்று, இது அது நீயாகின்ற யெனப்படும். நாலாவதான அதர்வண வேதவாக்கியம் அயமாத்மாபிரமம், இது அயம் ஆத்மா பிரமமெனப்பதங்கள் மூன்று, நான் ஆத்மாபிரமமாகிறேனெனப்படும். சீவபரஐக்கியத்தைக்காட்டும் இந்த நான்கு குரு வாக்கியங்களில் தத்வசி வாக்கியம் வஸ்துவைக் கரதலாமலகம் போலக் காட்டுகையினாலும், மூன்று வாக்கியங்களின் அருத்தமதிலிருப்பதாலும், தத்வமசி வாக்கியம் மகாவாக்கியமெனப்படுவதாம். வாக்கியங்களின் சிரவண மனன நிதித்தியாசன முதலியவைகளை முன்னமியற்றிய உண்மைப்பொருள் விளக்கம், ஞானானந்த விளக்கமென்னு நூல்களில் விரிவாயறிக.

      (உ-ம்) “வேதமோ டாகம மெய்யா மிறைவநூ, லோதும் பொதுவுஞ் சிறப்புமென் றுன்னுக” வென்று திருமூலர் திருமந்திரத்திலும், “வேதநூல் சைவ நூலென் றிரண்டே நூல்கள், வேறுரைக்கு நூலிவற்றின் விரிந்த நூல்கள்’ என்றும், “ஆரண நூல் பொது சைவ மருஞ்சிறப்பு” என்றும் சிவஞானசித்தியாரிலும், “முக்கிய வேதோத்பத்தி பிரக்ஞானம் பிரமமென மொழியும் வேதம், சிந்தைசெயில் அகம்பிரமாஸ்மியெனும் வாக்கியஞ் செப்பு முன்றிற், றந்தோமசி யெனும் வாக்கியம் நாலாவதயமான் மாபிரம் மென்ன, வந்த விந்த வாக்கியந்தா னதர்வணத்தில் வகுத்த வாறே” என்று மெய்ஞ்ஞானகுரு வாக்கியத்திலுமறிக.

வேதாகமம் பதி பசு பாச மார்க்கம்.

      வேதாகமங்கள் கூறும் பதி பசு பாச மென்னுந்திரிபதார்த்தங்களில் பதி – நிமித்தகாரண கர்த்தா. பசு – சீவன், பாசம் – உடலெனப்படும். “நரைக்க வருமுடல் பாசம் பசு சீவன்றான் நவில்வர் பதிபானதுவே பரமதென்று” ஶ்ரீ சங்கரசாரிய ஸ்வாமி நவில்கள் சொல்லி யிருப்பதையும், “ஒன்றென்ற தொன்றேகா ணொன்றே பதிபசுவா மொன்றென்ற நீபாசத்தோடுளைகாண்” என்று சிவஞானபோதத்திலுங் காண்க.

வைஷ்ணவ சித்தாந்தம் வேதாந்தம்.

      பிரதானதத்துவங்கள் சித்து, அசித்து, ஈஸ்வரனெனப்படும். சித்து – ஆன்மா, அசித்து – பிரகிருதி, ஈஸ்வரன் – ஈஸ்வரனாம். சித்அசித் பிரமமொன்றுமே தத்துவமென்றும், அந்தப்பிரமம் ஶ்ரீமந் நாராயணனே என்றும், அந்த ஶ்ரீமந் நாராயணனே உபாயமென்றும், பரம்பிராப்யமென்றும், பிரமசூத்திரம் வியாச்சூத்திரமென்று வழங்கப்படுவதாகிய வேதவியாச பகவானால் செய்யப்பட்ட மீமாஞ்சையென்னு நூலிலும், வேதாந்த சிந்தாங்களிலும், பகவத்கீதை ஸ்மிருதி இதிகாசபுராணங்களிலும் கூறப்பட்டுள்ளன.

 

தத்துவஞானம்.

      தத்துவஞானமாவது – வேதாகம புராண சாஸ்திர விசாரணையினாலே திரிபதார்த்த நிச்சயமுணர்ந்து தன்னைத் தானறிதலே தத்துவஞான மெனப்படும். தத்துவஞானமே பெரிதென்றுங்கர்த்தாதத்துவா தீதனென்றும், மாயாகாரியமான சரீரத்துட னெவ்வளவு கூடியிருந்தா னவ்வளவு மறப்பேயாகையா லதனைவிட்டு நீங்கினால் ஞானக்கிரியைகள் பிரகாசிக்குமென்றுஞ் சொல்லப்படும். தத்வமசி என்னும் மகாவாக்கிய திரிபதார்த்த உண்மையை வேதாந்த விசாரணையினாலறிந்து நிதித்தியாசன சாதகஞ்செய்ய விளங்குமெனப்படும். இதற்குவிரிவு முன்னமியற்றிய உண்மைப்பொருள் விளக்கம் ஞானாந்த விளக்கமென்னு நூல்களிலறிக.

தத்துவசத்தம் சகலத்துக்கும் பொருந்துமென்பது: -

      பிரபஞ்சத்திலுள்ள ரூபாரூபங்களெல்லாம் தத்துவங்களினுடைய ஸ்வரூபமாம். மண் தண்ணீர் நெருப்பு காற்று என்னு நாலு பூதங்களும் ரூபா ரூபங்களாம். ஆகாசதத்துவங்களெல்லாம் அரூபமாம். அருவாரூபமென்றது உபயரூபங்களாம். அருவமாகிய சிவம் சத்தி நாதம் விந்துவும், உருவமாகிய ஈஸ்வரன் முதலயினவெல்லாமும் தத்துவமெனப்பெயர் பெறுமென்க. அருவாருவமாகிய சதாசிவமூர்த்தியும் ஆன்மவர்க்கங்களும் பாசங்களுமாகிய விவையெல்லாம் அழியாமலுண்மையான வஸ்துவாயிருப்பதினாலே தத்துவ சத்தம் இவைகளுக்குச் சொல்லப்பெறுமாம். தத்துவவபிமானி தேவதைகளுக்கும், ஈசானாதிமந்திரங்களுக்குந் தத்துவ நாமங்களே யாம். தத்துவம் தூலசூக்கும பரங்களாயிருக்குமென்க. ஆன்மாக்களுக்குப் பொருந்துந் தத்துவம் சாதாக்கியமளவிவேயாம்; சத்திசிவமிரண்டு மடையத்தக்கனவாம்.

      உ-ம். “தத்துவ ரூப மாகுந் தருமகு வுருவமெல்லாந், தத்துவ சத்தஞ் சாருஞ் சகலமுந் தத்து வங்காண்” என்றும், “தத்துவந் தூல சூக்க பரங்களு மாகி நிற்கும், தத்துவந் கன்னிற் சாரு மணுக்கள்சா தாக்கி யத்தில்” என்றும் சிவஞானசித்தியாரிலறிக.

      பிரகிருதி மாயையி லுண்டான தத்துவங்களாகிய சுரோத்திராதி ஞானேந்திரியங்கள் – 5, வாக்காதி கண்மேந்திரியங்கள் – 5, ஞான கன்மேந்திரிய விஷயங்களான சத்தாதி வசனாதிகள் – 10, மனாதி அந்தக்கரணங்கள் – 4, ஆக இருபத்திநாலும் ஆன்மதத்துவமென்றும், கலையாதி வித்தியாதத்துவங்கள் 7, சுத்தாதி சுத்ததத்துவங்கள் 5, ஆக 12-ம், ஆன்மதத்துவம் இருபத்திநாலுமாகச் சேர்ந்து 36 தத்துவம் சித்தாந்தத்துக்குரிய தத்துவங்களென்றுஞ் சொல்லப்படும். புறக்கருவிகள் 60ம் சேர்ந்து மொத்ததத்துவம் 96 எனப்படும். ஆன்மதத்துவம் இருபத்திநாலுக்குமேல் 25ந் தத்துவம் ஆன்மாவாம். 26ம் தத்துவம் பொருளென்றெண்ணப்பட்ட ஈஸ்வரனென்றும், இருபத்தேழாந் தத்துவம் பொருளென்றெண்ணப்பட்ட பரமேஸ்வரனென்றுங் கூறப்படும்.

      உ-ம். “எண்ணுக பிரதானத்தை யிருப்பதிநாலாம் வேறென், றெண்ணுக புருடன் றன்னை யிருபத்தைந் தாவனென்றே, எண்ணுக யிருபத் தாறு பொருளென விசன்றன்னை, எண்ணுக வினையி லீச னிருபத்தே ழாவ னென்றே” என்று சிவதருமோத்தரத்திலும், “ஐயஞ்சினப்புறத்தானு மாரு ரமர்ந்தவம்மானே” என்று ஆளுடையவரசு நூலிலும், “பஞ்சவன்சோயம் புருஷம்” என்று சொல்லப்பட்டிருப்பதையு மறிக.

தன்னை யறிவதும் யாவுமறிவுமயமென்பதும்: -

      வேதம் இன்னது தேகியினையனென்றுமறிகின்றவன் எவனோ அவன் கூடஸ்தனைப் பிரமமென்று தெரிந்துகொண்டவனானவனெனவும், தன்னைத்தானென்றறிந்தவனாகுமெனவும்படும். கூடஸ்தனாகிய தன்னையும், தனக்கிடமான பிரமத்தையும், தரிசிப்பானாயின் பின்பு அந்தப்பிரமமே கூடஸ்தனாய் அக்கூடஸ்தனே பிரமமாய்ச் சநநநீங்குவானென்க.

தன்னையென்றது: -

      நசிப்பதான தேகத்தில் நசியாமற்றானாய் சேடிததிருக்கிற பிரத்யே காத்மசைதன்னியமாம்.

தானென்றது: -

      போதமாகிய அறிவாம், அதாவது தேக முதலியவற்றை யானென்னுஞ் செருக்காகிய மயக்கவுணர்வாம். அறிவேபரமும் உயிருமாம். அறிவைத்தவிர உயிர், பர மிரண்டுமில்லையாம். தன்னைத்தன்னாலறிவதன்றி மற்றொன்றா லறியப்படாதென்க, ‘இன்னது தேகந்தேகி யிவனென வுணர்வன் யாவன் அன்னவன் றன்னைத்தானென் றறிந்தவனாகும்” என்று கைவல்யநவநீதம். எவன் பிரமமாகிய தன்னை மறந்தானோ அவன் எவ்விதபதவிகளிலு நிலையின்றி சுழற்காற்றிலகப்பட்ட செத்தைபோல அழிவற்ற காலச்சக்கரமென்னு மயக்கத்தில் மாறாது பிறந்திறந்து திரிந்துக்கொண்டேயிருப்பனாம். தன்னைத்தானுள்ளவாறு காண்டல் தஸ்மரணை யெனவும், இதுவே அறிவெனவும், இது சச்சிதானந்த மெனவும்படும். தன்னை அயலாகக்காண்டல் அதாவது அறியாமையே விஸ்மரணையாம். இதுவே அநிர்தசட துக்கமாம், “தன்னையுந் தனக்கா தாரத் தலைவனை யுங்கண்டானேல், பின்னையுத் தலைவன் றானாய்ப் பிரமமாய்ப் பிறப்புத்தீர்வன்” என்று கைவல்ய நவநீதத்திலும், “தன்னை யறியாமற் றானே கெடுகிறான்” என்று திருமூலர் திருமந்திரத்திலுமறிக.

அறிவு ஞானமும் அஞ்ஞானமுமாமென்பது: -

      தன்னை மறந்த ச்அறியாமையே அஞ்ஞானமும், தன்னை யுள்ளபடி காண்டலே ஞானமுமாம். அஞ்ஞானத்தைக் கெடுப்பது மெய்ஞ்ஞானமே யன்றி கருமமன்றெனப்படும். ஞானத்தை யறிவிச்குஞ்சத்தி விசாரத்துக்கே யன்றி கருமத்துக்கில்லையாம்.

சத்கருமமாவது: -

      சத்கருமத்தைப் பலாபேட்சையின்றி ஈஸ்வரப்பிரிதியாகச்செய்யில் அந்தக்கரணத்திலுள்ளவசுத்தம் நீங்கி சித்தசுத்தி வந்து ஞானமுண்டாமென்க. பூர்வகருமபந்த நிவர்த்தியின் பொருட்டுக் கருமத்தைச் செய்வதெனவும், பிரகிருதி குணங்களால் ஸ்வாதீனமில்லாமலே கருமங்களைச் செய்விக்கப்படுகிறானெனவும் படும். மனதையும் இந்திரியங்களையும் வென்று தன் ஆத்மாவும் சகல பிராணிகளின் ஆத்மாவும் ஒரே ரூபமாக நினைப்பவன் கருமங்களைச் செய்தாலும் அகங்காராதிகள் அவனைப்பற்றாவாம். பலாபேட்சையில்லாமல் எவன் கருமங்களைச்செய்கிறானோ அவனைத் தாமரை நீர்போல் பாபங்கள் பற்றமாட்டாவாம். ஶ்ரீ கிருஷ்ணபகவான் பகவத்கீதை 3- 5 அத்தியாயங்களில் சொல்லப்படும்.

உண்மை யறியுஞ்சத்தி யுணர்வுக்கேயன்றி தொழிலுக்கின்றென்பது: -

      ஓர் மனைக்குள் வைத்த பொருளை வைத்த விடந் தெழியாது மறந்தவன் வருடம் நூறு துக்கித்தாலும் வைத்த விடத்தை ஞாபகஞ் செய்து அறிந்த பின் அந்த வஸ்து கிடைக்குமேயல்லது ஆடியும் ஓடியும் குதித்துஞ்செய்யப்படுவதாகிய பல தொழில்களால் அந்த வஸ்து வெளிப்படமாட்டாதாம். இதுபோல விசாரஞானத்தால் அஞ்ஞானம் நீங்கும், பிரமப்பொருள் வெளிப்படுமென்க. எறிகின்ற விளக்கினாலும் கண்களாலும் இருட்டிலுள்ள பொருளைக்காண வேண்டும், சூரியனைப்பார்க்க நேத்திரமொன்றே போதும், விரிகின்ற சகத்தைக்காண விருத்தியும் பலமும் வேண்டும், உண்மையான பிரமவஸ்துவாகிய ஆன்மாவைத் தரிசிக்க விசாரரூபமான விருத்தி ஞானமொன்றே போதுமெனப்ப்டும். “மனைக்குள் வைத்த பண்டங்களை மறந்தவன் வருட நூறழுதாலும் நினைத்துணர்ந்த பின் கிட்டும்” என்றும், “புரிகின்ற விருத்தி யொன்றே போதுமெய்ப்பொருள் காண்போர்க்கே” என்றும் கைவல்யநவநீதம்.

 

பிரமம் அகமுக மனத்திற்கு அறியப்படுமென்பது: -

      அறிவென்னும் உண்மையில் அந்தர் முகதிருஷ்டியாய் இடைவிடாத அப்பியாசத்தால் மனமானது தன்வசமாகயிருந்து சைதன்னிய ஸ்வரூபமானால் வெறுக்கப்பட்ட தேகத்திலிருந்தாலும் பிரமானந்த சாகரஸ்வரூபராவரெனப்படும். சாக்கிராதி அவத்தைகளுதிக்கின்ற விருத்திகளைத் தள்ளில் பரி பூரணமாயிருந்து நிரதிசயானந்தத்தை யடையலாமென்க.

பழக்கவாஸனை விருத்திகளடக்குமுபாயம்: -

      போதமாகிய அறிவை அரசனாக்கி அவ்வரசனே தானாகி புத்தி முதலிய அகக்கரணபுரக்கரணங்களனைத்தினையும் அடிமைகளாக்க, கரணங்கள் தலையெடாதடங்குமாம். “அசத்திலெம்மட்டுண்டம் மட்டும் பராமுகமாயினாய், நிசத்திலுள் விழிப்பார்வையாய் நிரந்தரப் பழக்கத்தால், வசத்திலுள்ள மனம் நின்று சின்மாத்திர வடிவமாகிடின் மைந்தா, கசத்ததே கத்திலிருக்கினு நீ ஆனந்தக்கடல் வடிவாவாயே” என்றும், “போதமாமிராசனறானாய் புந்தியைப் புலன்களாகத்தாதரா யிருக்கப்பெற்றாற் சகலமுமடங்குந்தானே” என்றும் கைவல்ய நவநீதம்.

தற்சொரூபமுத்தி –

      நினைவாகிய மனோசங்கற்பத்தினாலே இவ்வுலகமும் இன்னுமிதைப் போல்வனவும் விளங்கானின்ற அனேகவுலகங்களும், பதவிகளுமாகத் தோன்றுவதனைத்தினையும் ஒவ்வொன்றாக நியதிகளைந்து நீங்கி முடிவில் நின்றதெதுவோ அதுவே எங்கும் பரிபூரணமாக விளங்கும் யானென்னுமறிவாம். எல்லாமாயும் அல்லவாயும் விளங்குதல் அறிவாதலால் சிற்பிரகாசத்தை யன்றியதொன்றுமில்லை என்றும், நினைப்பு மரப்பேசநநமறணத்துக்கிடமாமென்றும், கூறப்படும். “மனத்தினாலெண்ணித்தானே வந்த திவ்வுலகமெல்லாம்” என்று கைவல்ய நவநீதம்.

      நாமரூபமாகிய இவ்வுலகம் தன் நினைவிலே தோன்றுகிறதென்றும், உலகமெதிரிட்டுக்காண்கையினாலே நினைவு வேறு உலகம் வேறே யாமென்றும், உலகத்தை நீக்கி நினைவைப்பார்க்கு மிடத்து நினைவு காணமாட்டாதென்றும், நினைவு தன்னிடத்தில் நின்றே தோன்றுகிறதென்றும், நினைவைநீக்கி தன்னைப் பார்க்கத்தான் பிரகாசியாநிற்குமென்றும், தன்னைபிறித்து நினைவைப் பார்க்க நினைவு காணப்பட்டாதென்றும், நினைவு தானுமல்ல தன்னைவிட வேறுமல்லவென்றும், நினைவு தன்னிடத்திலேயே கற்பித மென்றும், இது சுருதி முடிவிற் சொல்லும் உபதேச சித்தாந்தமென்றுங் கூறப்பட்டிருப்பதையு மறிக.

 

தத்துவரூப, தரிசன, சுத்தமென்பது: -

      தத்துவரூபமாவது: - தத்துவங்களையெல்லாந் தனக்கன்னியமாகக் காண்பதுவாம். தத்துவதரிசனமாவது: - தத்துவங்களைச் சடப்பொருளென்றும், தன்னாலறியப்படுவதென்றும், தன்னறிவிலே விளங்கக் காணப்படுவதாம். தத்துவசுத்தியாவது: - தத்துவங்கலைத் தாக்காமல் தன்னறிவிலே கண்டு நீங்கி தானசைவற அன்னியனா யெங்குநிறைவாய் நித்யமாயுள்ள முறைமையை யறிந்து நிற்பதாம்.

தத்துவநியதியாவது: -

      போதத்தை முன்னிடாமல் மண் முதல் நாததத்துவமீறாகச் சொல்லப்படும் தொண்ணூற்றாறு கருவிகளிற் பொருந்தி ஒவ்வொன்றையும் விசாரித்து இது விதுவென்று பகுத்தறிந்து முடிவில் நின்றதெதுவோ அதுவே எங்கும் பரிபூரணமான யானென்னும் அறிவெனக்காண்கையாம். ஆன்மாசித்து, உடலன்று, அது போகதாகமுடையது. உடல் நழுவில் ஆன்மாவுக்குப்போகதாக மொழியவில்லை. போகதாக மொழியுமளவும் அதற்கு ஒருடலேதேனுமிருக்க வேண்டுமென்பதை யறிக.

நானென்னும் பொருளிதென்பது: -

      நானென்னு தாருலகி லொருவருமில்லை, அதையறியப் புகுவாருமில்லை, பொருளல்லவற்றைப் பொருளாகக்கண்டதனால் துவிதபேதமறு தற்கிடமில்லை. அங்ஙனமறாமல் உடல் நழுவின் தேகம் நானென முன்போல் வருமென்பதை யறிக. நானென்றது நீ யென்னு ஞானமாகிய வித்தையும், பிரமமென்றது ஆனந்தமுமாம். நானென்றகுச் சுயவடிவம் மெய்யுணர்வாம். நானென்னும் பொருள்யாதோ அது பிறந்ததுண்டானாலல்லவா பின்னர் சாவதுமுண்டாயிருக்கலாம். பிறந்ததேயில்லை யென்னும் பொருளாகிய பிரமமென்பதுவும் நானே யாம். பிறந்தது நானல்லனாயின் பிரமமென்று சொல்லப்பட்ட அந்த நானே உற்பத்தியும் லயமுமில்லாத பிரமமாகிய கூடத்தனே நானென்கவென்பதாம். பிரக்ஞானம் பிரமம் அதாவது ஞானமே பிரமமென்னும் இருக்கு வேதவாக்கியமும், அகம்பிரமாஸ்மி அதாவது நான்பிரமமென்னும் யசுர் வேதவாக்கியமும், தத்துவமசி அதாவது அது நீ யாகின்றாய் என்னும் சாமவேத வாக்கியமும், அயம் ஆத்மா பிரமம் அதாவது நான் ஆத்மா பிரமமென்னும் அதர்வன வேதவாக்கியமும்” கூறுகின்றபடி இதுவே அதுவாய் அதுவே யிதுவாயிர்ய்க்குமெனவறிக வென்பதாம்.

      “பிறந்ததுண்டானாலன்றோ பிறகு சாவது தானுண்டாம்”, பிறந்ததேயில்லை யென்னும் பிரம்மமாமதுவு நானே” என்று கைவல்ல்யநவநீதத்திலும், “நானெனவும் நீயெனவுமிருதன்மை நாடாமல் நடுவே சும்மாய்த், தானமருநிலையிதுவே சத்தியம் சத்தியமெனத்” தாயுமான சுவாமிகள் பாடலிலும் காண்க.

ஸோகம்பாவனை யென்றது: -

      ஸ அவன் அகம் நான் இதனைச் சோக மெனப்படும். இது வடமொழி அது நான் ஆனேன் என்று சோகம் பாவனை பண்ணும்படி பழய வேதங்களுங் கூறுகின்றனவாம். அந்த பாவனை அத்துவிதமாகப் பாவிக்குமாம். சிவோகம் பாவனையினாற் சிவமுமாவரெனப்படும். “சிவோகம் பாவிக்கும்த்தாற் சிவனுமாவர்” என்று சிவஞானசித்தியார். அது நான் ஆனேனென்று தத்துவமசிமகாவாக்கியம்.

பாச, பசு, பதிஞானமாவன: -

      வேதசாஸ்திர முதலான வையெல்லாம் ஆன்மபோதத்தினாலறியப் படுகையினாலே பாச ஞானமெனப்படும். பசுஞானமாவது: - தத்துவங்களை யெல்லா நியதி களைந்து கழன்றவிடத்து ஆசையின் மிகுதி யினாலே நானே பிரமமென்று சொல்லப்பட்ட அறிவு ஒரு சரீரத்திலே கூடிநின்று இந்திரியவிடயங்களை ஒவ்வொன்றா யறிகையினாலே பாசஞான மெனப்படும். பதிஞானமாவது: - ஒருத்தரறியாமற் சர்வத்தையும் ஏககாலத்திலே தானே யறிகையினாலே பதிஞானமெனப்படும்.

பதி பசு பாசம் முத்தியிலுமழியாதென்பது: -

      பேரின்பத்தைப்புசிக்கிறது ஆன்மா, பேரின்பத்தை மிகவுங்கொடுக்கிறது கர்த்தா, பேரின்பத்தை மேன்மேலும் விளைவிக்கிறது மலமாதலால் பதிபசுபாசம் முத்தியிலுமழியாதென்க.

                “முத்திதனில் மூன்று முதலு மொழியக்கேள்

      சுத்தவனு போகத்தைத் துய்த்தலெனு – மெத்தலே

      யின்பங் கொடுத்தலிறை யித்தை விளைவித்தலமலம்

      அன்புடனே கண்டுகொள்” என்று உண்மைவிளக்கம்

 

அறிவே நீயா மென்றது: -

      தத்துவங்களை யெல்லாம் அதாவது கருவிகளையெல்லாம் இதுவிதுவென்று பகுத்தறிந்து அவையெல்லாந் தான் அன்றென்று நீங்கி அவற்றின் முடிவிலே நின்ற வறிவாகிய நீயே ஆன்ம சைதன்னியமெனப்படும். திரிசியவஸ்துக்களும் நீ யல்லை, அறியாமையான சூன்னியவஸ்துக்களும் நீ யல்லை, சைதன்ய வஸ்துவான உனதாத்மஸ்வரூபத்தை நீ யனுபவித்துணர்க வென்பதாம்.

தன்னையறியா வறிவென்பது: -

      தத்துவங்களையெல்லாம் நியதிகளைந்து விடுவித்து முடிவில் நின்ற அருளையும் பரையையுங்கடந்த தன்மேற்றோன்று மானந்தத்தையு மெதிரிடாமல் அதனுள் அதீதப்பட்டிருப்பதே. தன்னை யறியாவறி வென்ப்படும். அறிவறிவாயிருந்தோன் மீட்டும் நானென்று பிரிபடுவனாம். நாவானது தன்பெயரை நாவென்று கூறினும் அப்பெயருக்குரிய பெயர்வேறின்றித் தானாயிருந்த அந்நாவைப்போலும் நீ நான் என்று சொன்மாத்திரமே யன்றித்தானுமெதிருமதற்குண்டாகா தென்றும், எல்லாம் அறிவு மயமாயிருக்குமென்றுங் கூறப்படும்.

ஆனந்தாதீதத்துக்கு மேல் வேறுநிட்டையில்லை யென்றது: -

      தத்துவங்களை நீங்கியவற்றின் முடிவில் நின்ற அருளையும் பரையையுங் கழன்றுநின்றால் தற்போதமும் ஆணவவாசனையாகிய சார்புமொழியும் அப்படி ஒழிந்தவிடத்திற்கும் அதீதத்திற்கும் யிடையாகிய சந்தியில் ஞானானந்தந்தோன்றும். தற்போதம் அருளிலடங்கியும் விரிந்தும் நின்றபழக்கமதைப் பார்த்தறியவேண்டுமாம். போதமடங்கில் அருளும் அது அசையிலான்மாவுமாம். அதனைச் சிறிதுந் தோன்றாதடக்க வேண்டுமென்க. தற்போதங்கெட்டு ஆனந்தாதிதப்பட்டாலதற்குமேல் வேறுநிட்டையில்லை யெனப்படும்.

ஞானத்தில் சரியையென்பது –

      தத்துவங்களை நியதிகளைந்து தன்னை அருளாலறிந்து முடிவில் நிற்பது ஞானத்தில் சரியையாம். ஞானத்தில் கிரியையாவது: - அருள்வடிவாயிருப்பது கிரியையாம். ஞானத்தில் யோகமாவது: - அருள் வடிவாயிருப்பது தற்போதஞ் சிறிதுந் தோன்றாதொழிந்து ஞானம்பெறுவதாம். பரைநீக்கத்திற்றோன்றும் ஞானானந்தத்திலதீதப்படுவது ஞானத்தில் ஞானமாம்.

தந்திரதலையாவது: -

      ஆலயங்கட்டுதல் முதலியவைகளாம். வத்துசத்தியினாற் கொள்வதாம். மந்திரகலையாவது: - பூசை முதலிய கிரியைகள். மந்திரங்கள், யோகமுமாம். யாதாமொருவன் எந்தத் தெய்வத்தை யாராதித்தான் அந்த தெய்வத்துக்குரித்தான நியாச முதலியவைகளின் உண்மையை யுணர்ந்து அந்தத் தேவதையை யாராதனை செய்தலாம். உபதேசகலையாவது: - பரமேஸ்வரனுடைய வியாப்தி வியாபகங்களை ஆசாரியனிடமாக வுள்ளபடி யறிகையாம்.

      சரியை, கிரியையெனு மிரண்டும் தந்திரகலையிலும், யோகம் மந்திரகலையிலும். இம்மூன்றும், உபதேசகலையிலுமடங்குமென்க. தந்திரகுருவாயும், மந்திரகுருவாயு மெளன குருவாயுந் தோன்றி குருநாதன் உபதேசிப்பாரென்க. உபதேசகாலத்தில் ஆசாரியருக்கு உடல்பொருளாவி மூன்றுந் தத்தஞ்செய்யவேணுமாம்.

      உ-ம். “மந்திரகுருவே யோகதந்திர குருவே மூலன் மரபில்வரு மெளனகுருவே” என்றும், “வைத்தபொருளுடலாவி மூன்று நின்கைவசமெனவே யான் கொடுக்க வாங்கிக் கொண்டு” என்றும் தாயுமானஸ்வாமிகள் நூலிலறிக.

கலைஞானங்கள் அறுபத்துநாலாவன: -

      அக்கரவிலக்கணம், இலிகிதம், கணிதம், வேதம், புராணம், வியாகரணம், நீதிசாஸ்திரம், சோதிடசாஸ்திரம், தருமசாஸ்திரம், யோகசாஸ்திரம், மந்திரசாஸ்திரம், சகுணசாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், வைத்தியசாஸ்திரம், உருவசாஸ்திரம், மதனசாஸ்திரம், இதிகாசம், காவியம், அலங்காரம், மதுரபாடனம், நாடகம், நிருத்தம், சுத்தப்பிரமம், வீணை, வேணு, மிருதங்கம், தாளம், அத்திரபரிட்சை, கனகபரிட்சை, இரதபரிட்சை, கஜபரிட்சை, அசுவபரிட்சை, இரத்தினபரிட்சை, பூமிபரிட்சை, சங்கிராமவிலக்கணம், மல்யுத்தம், ஆக்ரூடணம், உச்சாடணம், வித்துவேடணம், மோகனம், வசீகரணம், இரசவாதம், காந்தர்வவாதம், பை பிலவாதம், கவுத்துக வாதம், தாதுவாதம், காரூடம், நட்டம், முட்டி, ஆகாயப் பிரவேசம், ஆகாயகமனம், பாகாயப்பிரவேசம், அதிரிச்யம், இந்திரசாலம், மகேந்திரசாலம், அக்னித்தம்பம், சலத்தம்பம், வாயுத்தம்பம், திட்டித்தம்பம், வாக்குத்தமபம், சுக்கிலத்தம்பம், கனனத்தம்பம், கடகத்தம்பம், அவத்தைப்பிரயோகம் என அறுபத்திநாலு கலைஞானங்களாம், (64 சித்திகளெனப்படும்.)

ஞானமுத்திரைகளாவன.

      சாம்பவி, பைரவி, கேசரி என ஞானமுத்திரகள் மூன்றெனப்படும். பரிசுத்தமாகிய சாம்பவி யென்னு மிந்த முத்திரையே சிவயோகமென்றும், அதிலிருக்கத்தக்கவனே சாதகசாத்தியனென்றும், இந்த சாம்பவிமுத்திரையிலிருந்து சதாநிட்டை சாதகஞ்செய்யும் சாதகர் நாதானந்தம் பெறுவரென்றும், அந்த நாதவச முற்றால் மயக்கந் தோன்றுமென்றும், அது நீங்கும்வகையில் நின்றால் அருட்டரிசன முதயமாய் காண்பானாதிகளிறந்து பஞ்சாக்ஷர முதலியவைகளொடுங்கித் துவிதமறக் கலக்கின்ற மெளனநிலையையடைந்து விளங்குவரென்றும், இது வாமதேவர் சுகயோகிமுதலிய முனிவர்கள் செய்த சாதகமென்று முரைக்கப்படும்.

பிரதான முத்திரையாகிய சாம்பவியின் சாதனமாவது: -

      இரண்டுகண்களையும் சிதாகாசத்தில் இமையாமற் பொருந்த நிறுத்தியுதிக்கின்ற கருத்தையுள்ளடக்கி அங்ஙனம் பொருந்திய நெறியாலே மன மலைதலை யழித்து அறிவறியாமையு நீங்கச் சுத்தசாதன்ஞ்செய்து நித்திரையைச் செய்யாமற் செய்வது பிரதானமுத்திரையாகி சாம்பவியின் சாதனமாம்.

      உ-ம். “இமையாத நாட்டத் திருந்துணர் வாருக், கமையாத வானந்த மாம்” என்று ஒளவைக்குறளினும், “தூங்கிவிழித் தென்னபலன் றூங்காமற் றூங்கிநிற்கும் பாங்குண்டா லல்லோ பலன்காண்பேன் பைங்கிளியே” என்று தாயுமானஸ்வாமிகள் பாடலிலும், “கட்டறுக்க வொண்ணாக் கருவிகர ணாதியெல்லாம், சுட்டறுத்து நிட்டையிலே தூங்குவது மெக்காலம்” என்று பத்திரிகிரியார் பாடலிலுங்காண்க.

ஞானயோகமாவது: -

      தேகமெல்லாந் தாயி னம்சமும், அப்பனுக்கு எலும்போடே நரம் பிரண்டென்றும், அந்த யிரண்டிலே ஒன்று சத்தியென்றும், மற்றொன்று பிராண வாயு சிவமென்றும், இரண்டுமொன்றாகக்கூடி மையமாய் நிற்பதுவே சுழிமுனை என்றும், அந்தச் சுழிமுனையிலே மூன்றுகாந்தி யுண்டாமென்றும், பிராணன் நெஞ்சினுள்ளே தாமரைநூல்போலாடுமென்றும், அதிலிரட்டித்த அபான வாயுவையுங் கண்டால் ஞானயோகமாமென்றும், இந்த யோகத்தினால் தேகம் கைலாயதேகமாமென்றும், இது புஜண்டர் முதலிய நவகோடி சித்தர்க ளனுபவமென்றுஞ் சொல்லப்படும்.

ஞானசாதன நிட்டை: -

      மான்தோல், புலித்தோல், சித்திராசனம், வெள்ளைவஸ்திரம், தருப்பை ஆகிய ஐந்திலொன்றை யழுத்தமான பூமியில் விரித்து சலனமற்ற ஏகாந்தத்தானத்தில் வடதிசைமுகம் பார்த்துக் கொண்டு அங்காசனஞ் செய்து ஞானநிட்டை கூடவேண்டுமெனப்படும். அங்காசனமாவது: - பத்திரம், வீரம், குக்குடம், அருமையான பதுமம், கோமுகமென்னு மைந்தாம். இவைகள் ஞான சாதனத்துக் குரியவைகளாம். அங்காசனத்திலிருந்து நிட்டைபுரிதலே சதாநிட்டையென்று சொல்லப்படும். இடை, கண்டம், தலை, கண் ஆகிய நான்கும் ஸ்தம்பத்தைப்போல நெறித்திருக்கவும், மனமானது விஷபாகாரங்களைப் பற்றாமலிருக்கவும், இன்பத்தைப் பெறும்படி நினையாமனினைத்துப் பிரகாசிக்கின்ற ஒப்பற்ற நிலையில் சதாகாலமும் சாக்ஷித் தன்மையைப் பொருந்தியிருத்தலே ஞான நிட்டையாம். இந்த ஞானநிட்டையில் கைவல்லியப்பட்டால் பிரமத்துடன் கலந்து பிறப்பிறப்பு நீங்கி தேகத்துடன் சீவன் முத்தியை யடைவரென்று சொல்லப்படும். நிட்டையில் மனமசையுமாயினும், மயக்கத்தைச் செய்யுமாயினும், ஆதனத்திலிருந்தெழுந்து பத்தடிநடந்து பின்பந்த நிட்டையிலுறுதிப்படுவதே ஞானயோகிக்குரிய குணமெனப்படும். நிட்டையில் மயக்கமற ஏறமாட்டாதவர்கள் அம்மயக்கம் நீங்க பஞ்சாக்ஷர மந்திரங்களைச் செபித்து ஆத்மாக்களுடைய மலங்களைப் பரிபாகஞ் செய்வரெனப்படும்.

      உ-ம். “ஆதனத்திருந்தே சாதனைச்செய்யும் போ தலை தருமன மடங்காமல், போதுமேயெனினுங் கேவலமயக்கம் புரியுமே யெனினுமங் கெழுந்து, நீதியினை யீரடியுலாவந்தே நிலவுமாதனத்திற் பொருந்தி” என்று நிஷ்டானுபூதியிலறிக.

நிட்டைமேவினோர்க ளாசாரங் கூறல்: -

      பூரணானந்தம் பெற்ற மெய்ஞானிகட்கு ஆடலும் பாடலுமுண்டாம். பிறப்பிற்றுன்பமும் வீட்டிலின்பமுந் தோன்றுமாம். ஞானநிட்டை யோர்க்கு இன்னது வேண்டுமென்றுஞ் சிந்தனையும், அச்சம், ஆகாரம், மைதுனம், நித்திரை யெனுங்காரியமும், நாணம், விரதமுதலிய சீலம், தியானம், தவம், சாதித்தொழில், அருவருப்பு, புண்ணியபாவங்கள் குலாசாரம், சமயாசாரம், ஆகிய இந்த மார்க்கங்களும், இரண்டறக்கூடி நின்ற சிவயோகிக்கில்லையாம். சிவனுடைய திருவடி நிழலைவிட்டொருகாலு நீங்கார்களாம். சீவன் முத்தர்களின் மகிமை யிவ்வளவென்றறியப் போகாதாம். பிரார்த்த கன்மம் நானாபேத மாகையால் கோபவானாகியும், சாந்திமானாகியும், விரக்திமானாகியும், ராகவானாகியும், போகவானாகியு மிருப்பார்களாம்.

      உ-ம். “ஞாலமதில் ஞானநிட்டை யுடையோருக்கு நன்மையோடு தீமையிலை நாடுவதொன்றில்லை, சீலைமில்லைத் தவமில்லை விரதமோடாச்சிரமச் செயலில்லை தியானமில்லைச் சித்தமலமில்லை, குலமில்லை, பாலருடனுன்மத்தர் பசாசர் குண மருவிப் பாடலினோடாடலிவைப் பயின்றிடினும் பயில்வர்” என்று சிவஞானசித்தியாரிலும், “நெக்கு நெக்குள்ளுருகி யுருகிநின்று மிருந்துங் கிடந்து மெழுந்தும், நக்குமழுதுந் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்து நவிற்றிச், செக்கர்போலுந் திருமேனித் திகழநோக்கிச் சிலிர்சிலிர்த்துப், புக்குநிற்பதென்று கொல்லோவென் பொல்லாமணியைப் புணர்ந்தே” என்று திருவாசகத்திலு மறிக.

 

 

யோகம்.

யோகமாவது: - 

       அகத்தொழின் மாத்திரையானே அருவத்திருமேனியை நோக்கிச் செய்யும் வழிபாடே யோகமாம். தூலசரீரத்தை அழிவின்றி நீடூழி காலம் சீவித்திருக்கக் கருதி இதற்காதாரமாயிருக்கின்ற சுவாசத்தைத் தன்வசப்படுத்துதற்குச் செய்யும் சாதனமென்க.

அஷ்டாங்க யோகமாவது: -

      இது இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதியென எட்டுவகையாம்.

      இயமமாவது: -     அஹிம்சை, சத்தியம், ஆஸ்தேயம், பிரமசரியம், தயை, ஆர்ஜவம், க்ஷமை, திரிதி, மிதாகாரம், கவுசம்யெனப் பத்து வகையாம்.

      நியமமாவது: -     தபசு, சந்தோஷம், ஆஸ்திக்யம், தானம், ஈஸ்வரபூசை, சித்தாந்த சிரவணம், லஜ்ஜை, மதி ஜெபம், விரதம் எனப்பத்துவகையாம்.

      இந்த இயமநியமங்களே ராஜயோகமா மெனப்படும்.

      ஆசனமாவது: -     ஸ்வஸ்திகம், கோமுகம், பதுமம், வீரம், கேசரி, பத்திரம், முத்தம், மயூரம், சுகமென ஒன்பது வகையாம்ல் விரிவு உண்மைப்பொருள் விளக்கத்தறிக.

      பிராணாயாமமாவது: -    இது சகர்ப்பம், அகர்ப்பம் என விருவகைத்து. சகர்ப்பமாவது – தியானத்துடன் மூச்சைப் பிடித்திருப்பது. அகர்ப்பமாவது – தியானமில்லாவல் மூச்சைப்பிடித்திருப்பது. இந்த விருவகையும் ரேசக, பூரக, கும்பகமாயிருக்குமாம். ரேசகமாவது – மூச்சை ஏற்றுதல் பூரகமாவது – மூச்சையுள்ளுக்கிழுத்தல், கும்பகமாவது – மூச்சை ஸ்தம்பித்தல். ரோகத்துக்கு 32 மாத்திரையும் பூரகத்துக்கு 16 மாத்திரையும், கும்பகத்துக்கு 64 மாத்திரையும் அளவுகளெனப்படும். இந்த ரேசகபூரக்கும்பகங்களின்னம் பலவாராயுமிருக்குமாம். ரேசத்துக்கு அக்ஷரம் அகாரம். பூரகத்துக்கு அக்ஷரம் உகாரம். கும்பகத்துக்கு அக்ஷரம் மகாரமுமாம்.

      பிராணாயாமத்டை சந்தியாகாலத்தில் சாதுக்கள் செய்து வருவதினால் நாடி சுத்தியும், மனோதிடமும், வசீகரமு முண்டாகிற தென்க. யோகிகள் பிராணாயாமஞ் செய்யவேண்டியதவசியமாம். ஸ்வாசமானது சூட்சுமசரீரத்தின் ஓர் அங்க மெனப்படும். பிராணாயாமமே ஞானமென்று நினைத்து மோசம் போகக்கூடாதாம். பிராணாயென்னும் பதமானது அடிக்கடி சுவாசித்தல் எனப்பொருள்படும்.

      தசவாயுக்களில் பிராணவாயு: - சரீரத்தில் மூலமுதல் சிரசு முட்டி யிருவிழிகளின் கீழாய் நாசி வழியோடி பனிரெண்டங்குலம் ஸ்வாசம் பாய அவற்றில் எட்டு உள்புக நாலு கழியுமாம். நாளொன்றுக்கு இயங்கும் ஸ்வாசம் இருபத்தோராயிரத்தறு நூறெனப்படும். நாடியென்றது உந்திச் சுழியிலிருந்து கீழ்மேலாக தேகமெல்லாம் பற்றி நிற்கும் நாடிகள் எழுபத்தீராயிரமெனப்படும். பிரதான நாடிகள் பத்தில் இடகலை நாடி வலக்காற் பெருவிரலினின்று அசைந்திளகி ஏறி யிடது நாசியையும், பிங்கலைநாடி இடதுகாற் பெருவிரலினின்று அசைந்திளகி ஏறி வலது நாசியையும் பற்றி நிற்குமாம். சுழும்நாநாடி மூலத்திற்றோன்றி நடுவெழுந்து சிரசு முட்டி பிராணவாயுவுடனிற்குமாம். இது பிரம்மநாடியாம். இதுவே ஓங்காரமாய் மந்திரகிரியாய் கடவுள் நாடியாய், அக்நி சூரிய சந்திரரெனு மூன்றும் ஒன்றானவிடமாய் நிற்குமெனப்படும். சுழும்நை என்றது சுழிமுனை யெனவும்படும். சுழுமநாநாடிக்கு வாமபாகத்திலிருக்கிற இடநாடி வழியாய் வாயு பிரவேசித்து சந்திரமண்டலத்தில் படிந்து இடது நாசியால் வெளிப்படுமாம். சுழும்நாநாடிக்குத் தக்ஷணபாகமாயிருக்கிற பிங்கலைநாடி வழியாய் வாயு பிரவேசித்து சூரியமண்டலத்திற் படிந்து வலது நாசியால் வெளிப்படுமாம்.

      நான் ஆனந்தன் சகல பூதங்களிலுமிருக்கிறேன், சகல பூதங்களு மென்னிடத்திலிருக்கிற தென்றெண்ணும் விக்யான யுத்தனுக்கு விடுவது (ரேசகம்) கிரகிப்பது, (பூரக), லயம், (கும்பக) மென்னு மூன்றுமில்லை யாம். நானென்கிற தெப்போதில்லையோ அப்போழுதே மோட்சமாம். இது அஷ்டவக்கிரக ரிஷிகீதையுற் காண்க.

      வாசிபிராணாயமமாவது: - வாசிமெளன மெனவித்தைகளிரண்டு. இதில் யோகத்துக்கு ஆதிவித்தை வாசியாம். மெளன மென்றால் ஞானவித்தையாம். வாசியையடக்கத் தக்கவனே சித்தனாம். மனதையெழும்ப ஒட்டாமல் கொன்றவனே ஞானியாம். கருவிகளைக்கட்டியிருத்தினவனே சிவயோகியாம்.

      வாசியென்றது: - தேசி, குதிரை, வாசிபிராணாயாம முதலியன யோகமும், மெளனத்திலநிற்க ஞானமுமாம். எதை ஞானயோகமென்று சொல்லப்படுகிறதோ அதை கர்மயோகமென்றே தெரிந்துகொள்ள வேண்டியதென்றும், ஆசையைத் தொலைக்காமல் யாரும் யோகியாகிறதில்லையென்றும். கன்ம பலனையபேக்ஷிக்காமல் வேதத்தில் விதித்திருக்கும் நித்யநைமித்யாதிகளைச் செய்கிறவனே சந்நியாசியும், ஞானியுமாகிறனென்றும், வேதகீதைகள் கூறுகின்றனவென்க.

      அகார, உகார, மகார, விந்துநாதங்களாகிய மூலபஞ்சாக்ஷரங்கள் ஞானத்திற்கும், நமசிவயமென்னும் பஞ்சாக்ஷரங்கள் போகத்திற்கு மூலமெனப்படும்.

      வாசியை மூலத்தில் வைத்துலேசாய் பிராணாயாமஞ் செய்ய குண்டலிக்குவ நடனமும், சூரியப்பிரகாசம் போலக் காந்தியுந்தோன்றுமாம். குண்டலிக்குள் வாசியை வைத்து பிராணாயாமஞ் செய்யத்திரண்டொலியும், சிலம் பொலியுங் காணுமாம். கண்டத்தில் அங்கென்றாணவாய்திறக்க வொட்டாதாம். புருவமத்தியில் மவுனத்தை யொட்டியுதரசாம்பவியைக்காணலாகும். புருவமைபந்திறந்து அமுத முண்டாய் காயசித்தியுமுண்டாமென்க.

      குளிகையாவது: - வாசி – மூலிகை. விந்து – ரசம். அக்நி – பீடமாம். இதை ஊம் என்ற ரசமணியாக்க கெளணத்தோடலாகுமாம். விந்தைக்கட்டினால் பரமபிரம மணியாகுமாம். ஆம் என்ற மணிவேகதகால அண்டர்களும் முனிவர்களும் பங்கினார்களென்க. விரிவு உண்மைப்பொருள் விளக்கத்திலறிக.

      அமுதமாவது: - விண்ணோர்மருந்தென்றும், வீரமருதென்றும் சோதி மருந்தென்றும், மூர்ச்சைத நீர்த்துபிர்தருமருந்தென்றும், தேவருணவென்றும், இனிமை, பால, நீர் என்றுஞ் சொல்லப்படும்.

      மதிநேர்மை, விரதநேர்மை, அக்நிநேர்மை: - மதிநேர்மையாவது – அம் என்று வாசிபூட்டி நிற்க கோடிமதியும் அமுதமுமுண்டாம். அந்த அமுதங்கொண்டால் தேகத்துக்கழிவேயில்லையாம். விரதநேர்மையாவது – உம் என்று நின்றால் கோடி சூரியப்பிரகாசமும், கண், மூக்கு மத்தியில் காந்தியுமுண்டாய்த் தேகம் மதிபோலத் துலங்குமாம். அக்நி நேர்மையாவது – அங் அம் என்று ரேசகம்பூரகம்பண்ணி கும்பகத்தில் நின்றால் பூரணரொலிப்பும் மெளனமு முண்டாம். மவுனவீடறிந்து மதியைத்தள்ளி, ரவியகிய சூரியனில் நிற்க பூரணமே வசமாமென்க.

தேகத்தில் ஆத்மாவுக்காதாரமான இடங்களாவன

      வலதுசரம், இடதுசரம், கண்டம், நாபி, கண், மூக்கு, செவி, உச்சி என்னுமிடங்களாம். இவைகளில் வலதுசரம் அதாவது வலதுநாசிக்கு சூரியனும், இடதுசரம் அதாவது இடதுநாசிக்குச் சந்திரனும், உடம்பு அதாவது கண்டத்துக்கு மஹேஸ்வரனும், நாபி யதாவது வுந்திக்கு விஷ்ணுவும், கண்ணுக்கு வுருத்திரனும், மூக்குக்கு அதாவது முகத்திற்குப் பிரமனும், செவி அதாவது காதுக்குச் சிவனும், உச்சிக்குப் பரமேஸ்வரனும் அதிதேவதைகளெனப்படும். தேகத்தில் பாதமுதல் முழங்கால் வரையில் பிருதிவி (மண்) பாகம் பிரமனாகவும், முழங்கால் முதல் தொப்புள் வரையில் அப்பு (ஜலம்) பாகம் விஷ்ணுவாகவும், தொப்புள் முதல் மார்புவரையில் தேயு (அக்நி) பாகம் உருத்திரனாகவும், மார்பு முதல் முகம் வரையில் வாயு (காற்று) பாகம் மஹேஸ்வரனாகவும், புருவ முதல் சிரசு வரையில் ஆகாய பாகம் சதாசிவனுமாக யோகசித்தர்கள் நினைத்திருப்பர்களெனப்படும்.

      அக்நிமண்டம் சூரியமண்டலம் சந்திரமண்டலங்கவாவன: - தேகத்தில் மூலாதாரத்துக் கிரண்டுவிரற்கிடைக்குமேல் பிருதிவியும் அப்புவும் கூடினவிடம் அக்நிமண்டலமாகவும், உந்திக்கு மேல் இருதயத்தானம் சூரியமண்டலமாகவும், உந்திக்குமேல் இருதயத்தானம் சூரியமண்டலமர்கவும், சிரத்தினடு சந்திரமண்டலமாகவும் சொல்லப்படும். அகாரம் – சூரியன், உகாரம் சந்திரன், மகாரம் அக்நியுமாக அக்ஷரங்களாம். சூரியனாகிய அகாரத்தைச் சந்திரனாகிய உகாரத்துடன் அணைத்து மகாரத்தை கும்பகத்துடன் பணிந்தால் ஆயிரக்கோடி சூரியப் பிரகாசத்துக் கொப்பாகுமாம். சந்திரன் சூரியணிற் சென்றால் வருத்துப்போக்குத் தெரியுமாம், சூரியனே சந்திரனாயும், சந்திரனே சூரியனாயும் மிருக்குமென்க. சந்திரனிற் சந்திரனாகனின்றால் சூரியனைக்காண மாட்டார்களாம். பிறந்திறந்துமாள்வர்களாம். சந்திரன் – இடகலை அதாவது இடது – நாசி. பிங்கலை – வலது நாசி அதாவது சூரியன் என்க.

      சூரியகலையாகிய வலதுநாசியில் சரம் நடக்கும்போது (1) அம், உம், சிம், வம், ஓம் என்றும், (2) அவ், மவ், ஓம் நமசிவாய என்றும், (3) உம், அம், சிவ, சிவாயநம என்றும் (4) சிவாயநம ஓம், ஐயும் என்றும் (5) சிவ, சிவா, அங், உங், சிம், ஓம் என்றும், (6) மங், உங், நமசிவாயா என்றும் உச்சரிக்க சூரியகலை ஆதார அதிதேவதை அறியப்படுமென்க.

      சந்திரகலையில் பூதி (சரம்) நடக்கும் போது (1) ஓம், கிலி நமசிவாயா அவ், ஓம் என்றும், (2) ஓம் ஐயும், சிவ அங்கிஷ என்றும், 93) சிவாயநம அம், உம், ஓம் என்றும், (4) ஆம், உம், மம் ஈம், ஓம் என்றும், (5) யம், ரம், அம், உம், மம், ஓம் என்றும், (6) ஈம், ஓம், அம், உம், மம் என்றும் உச்சரிக்க சந்திரகலையாதார அதிதேவதை யறியப்படுமென்க.

      இவை ரேசகபூரக கும்பகங்களிலுள்ள அக்ஷரங்களைப் பிரித்து குரு முகத்திலறிய வேண்டுமென்ப்படும்.

      யோகஸ்வாசபந்தனஞ் செய்யவிரும்புவோர் இயமநியம மார்க்கத்தில் நின்று வாயினாலுச்சரிக்கப்படாமல் நெஞ்சில் செபித்துக்கொள்ளு மந்திரங்களாவன.

      பம், லம், லம், என்று அறுநூறு தரமும், பம், பாம்மம், யம், ரம், லம் என்று ஆயிரந்தரமும், தம், டாம், மம், தம், தாம், தம், தாம், நம் பம் பாம் என்று ஆயிரந்தரமும், கம், காம், நம், நாம், நம், ஸம், ஸாம், ஜம், ஜாம் நம் தம், தாம் என்று ஆயிரந்தரமும், அம், அம், இம், இம் அம், ரிம், ரீம், லிரிம், லிரீம், எம், ஏம் ஓம், ஆம், அம், என்று ஆயிரந்தரமும், அன்ஸா என்று முடிவிலிரண்டாயிரந்தரமும் நெஞ்சில் செபிப்பரெனப்படும்.

      மூன்று மாதகாலம் சந்திரகலையாகிய இடது நாசியில் பூரித்து ஜலத்தை விழுங்கிக்காற்றினால் வயற்றை நிரப்பி, சூரியகலையாகிய வலது நாசியால் ரேசிப்பராம். பின்பு சூரியகலையிற் பூரித்து சலத்தை விழுங்கிக்காற்றினால் வயற்றை நிரப்பி சந்திரகலை யாகிய இடது நாசியால் ரேசிப்பராம். (ரேசிப்பது – மூச்சைவிடுவது) இந்த சாதனஞ்செய்வதினால் சரீரஞ் சுத்தியாய்ப் போதுமானவரையில் வாயுபக்ஷணஞ் செய்யப்பழக்கமாகுமாம்.

      ஹடயோகமாவது: - ஸ்வாசத்தைப் பூரணமாக உள்ளுக்கிழுத்து நவத்துவாரங்களையு மடைத்துக்கொண்டு அல்லது நாவை, விழுங்கிச் சுவாசபந்தனஞ் செய்திருத்தலாம். இராஜயோகியைப்போலச் சமதியி லிருப்பதாம். இந்தச் சாதனம் மனிதசஞ்சாரமில்லாத குகைகளிலிருந்து செய்வதாம். வாயுபக்ஷணம் பானமில்லாமல் செய்து அனேக காலம் தன் சரீரத்தில் தானே ஒளித்துசீவித்திருப்பதென்க.

      ஹடயோகத்துக்குரிய பஞ்சமுத்திரைகளாவன: - கேசரி, காசரி, பூசாரி, அகோசரி, உனாமணியென வைந்து. முத்திரைகளாம். கேசரியாவது: - நாவைவிழுங்கிச் சுவாஸபந்தனஞ் செய்திருத்தலாம். பூசாரியாவது: - பத்மா சனத்திலிருந்துக்கொண்டு நாசி நுனியைப் பார்த்திருத்தலாம். காசரியாவது: - நேத்திரத்துக்கு நேராக பார்வையை நாடி யசை வறயிருத்தலாம். அகோசரியாவது: - இரு செவியையுமடைத்து சப்தத்தை வலது காதினாற் கேட்டு பிரக்ஞையற்றுப் போமளவு மிருத்தலாம். உனாமணியாவது: - சுவாசத்தையுள்ளுக்கி ழுத்து நவத்துவாரங்களையுமடைத்து அல்லது நாவை விழுங்கி சுவாசபந்தனஞ்செய்திருத்தலாம். இதை யப்பிய சித்த ஹடயோகி யெளிதில் ஆத்ம தரிசனஞ் செய்வனாம்.

      யோகாப்பியாசிக ளாகாரங்களாவன: - அரிசி, கோதுமை, பால், சர்க்கரை, தேன், வெண்ணெய் என்பவைகளாம். உப்பு, எளி, காரம், எண்ணெய், கடுகு, வெங்காயம், பூண்டு, சம்பாரம், மாம்சம், சாராயம் இவைகள் கூடாவாம். பிராணாயாமஞ் செய்யத்துணிந்த யோகிகள் மானதவிரதம் அதாவது அதிகபக்ஷணஞ் செய்யாமல் அதிக நித்திரைசெய்யாமல் பிரபஞ்சத் திரிசியமில்லாமல் ஏகாக்கிரத சித்தனாய் ஈஸ்வரத்தியான்ஞ் செய்ய வேண்டுமெனப்படும். கருநெல்லி, வெண்சாரை யென்னும் கற்பமாவது: - கருநெல்லியாவது: - நல்வினை – புண்ணியமாம். வெண்சாரையாவது: - தீவினை – பாபமாம்.

ஆறாதாரமாவது.

      தேகத்தில் மூலாதாரம் ஸ்வாதிட்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆத்தினையென ஆதாரம் ஆறெனப்படும். மூலாதாரமாவது: - குகத்திற்கு இரண்டு அங்குலத்துக்குமேலும், லிங்கத்துக்கிரண்டு அங்குலத்துக்குக்கீழும் தானமாம். இந்த விடத்தில் கணபதி வல்லபையுடன் வீற்றிருப்பராம். ஓம் கணபதியே நம: வென்று செபிக்க, கணபதி பிரத்யக்ஷமாய் வேண்டிய வரங்களைத் தருவராம். ஸ்வாதிட்டானமாவது: - இதற்குத் தானம் லிங்கமூலமாம். இந்த விடத்தில் பிரமா சரஸ்வதியுடன் வீற்றிருப்பராம். நங் என்று வாசிகொண்டிருத்திப்போற்ற பிரமாபிரசன்னமாய் கேட்ட வரந் தருவராம். மணிபூரகமாவது: - இதற்குத்தானம் நாபி. இதில் லட்சுமியுடன் விஷ்ணு வீற்றிருப்பராம். பங் என்று வாசி பூட்டி, விண்ணோக்கியிருக்க விஷ்ணு பிரத்யக்ஷமாய் வேண்டியவைகளைத் தருவராம். அநாகதமாவது: - இதற்குத்தானம் இருதயகமலமாம். இந்தத்தானத்தில் உருத்திரயாளுடன் உருத்திரன் வீற்றிருப்பராம். சிங் என்று வாசிபூட்டி சுழும் நையையழுத்திப்பார்க்க உருத்திரன் பிரசன்னமாய் வேண்டியவைகளைத் தருவராம். விசுத்தியாவது: - இதற்குத்தானம் கண்டம். இதில் மஹேஸ்வரியுடன் மஹேஸ்வரன் வீற்றிருப்பராம். வங் என்று வாசிபூட்டி குருபரத்தில் திரமாய் நிற்க மஹேஸ்வரன் பிரத்யக்ஷமாய் வேண்டியவைகளை யீவரென்க. ஆக்கினியாவது: - இதற்குத்தானம் புருவமத்தியமாம். இதில் மனோன்மணியுடன் சதாசிவன் வீற்றிருப்பராம். யங் என்று வாசிபூட்டி பூரணத்தை நோக்கி நிற்க சதாசிவன் பிரத்யக்ஷமாய் கோரினவரங்களைத் தருவராம்.

      உடலின் வேறு உயிரெனும் ஆன்மா: - உயிர் சித்தெனவும், உடல் சடமெனவும்படும். சர்மாதிகளைத்தவிர வுடம்பென்பது கிடையாதாம். உடம்புக்கு முதற்காரணம் சுக்கிலமும், சுக்குலத்துக்குக்காரணம் அன்னபானாதிகளுமாம். சர்மாதிகளாவன – சர்மம் மாம்சம் அஸ்தி முளை தசை முதலியவைகளாம். மண்ணைத்தவிர வேறில்லையாம். முக்காலத்தும் சரீரியிருக்கிறளென்பது: - முன்சநநத்தில் செய்த கன்மத்துக்கீடாகத் தேகம் வந்ததென்றால் சென்றகாலத்தும், பிரகிருதம் பிராரத்தமனுபவிக்கிற தென்றால் நிகழ்காலத்தும், இப்பிறப்பிற் செய்த கன்மத்துக்கிடாய நரகசொர்க்கம்டையுமெனின் எதிர்காலத்துமாக முக்காலத்தும் சரீரி ஒருவனிருந்து நிலையின்றி காலச்சக்கரமென்று மயக்கத்திற்றிரிந்து கொண்டிருக்கிற னென்றேற்படும்.

      உடம்பின்பயனாவது: - உயிரைப்பெற்று வாழ்வதுவும், உயிருக்குறுதியா யிருப்பதுவும், உணர்வுகளுதிப்பதற்கும் உத்தமனைக் காண்பதற்கு மிடமாயிருப்பதுவும், ஆயுள் அளவைக் காட்டுவதுவும், உடம்பின் பயனேயாமென்க. மனத்தாற்குறித்துணரப்படுவது – இசை ஓசை குறிப்பு என்பனவாம். பொறிகளாலுணரப்படுவது – பண்பாம், உயிராகிய பொருளும் உயிரில்லாத பொருளுமாகிப் பொருள்களுடைய குணங்கள் பண்புகளெனப்படும். அறிகுணம், அறிவு, அருள், ஆசை, அச்சம், மானம், நிறை, பொறை, ஒர்ப்பு, கடைப்பிடி, மையல், நினைவு, வெறுப்பு, உவப்பு, இரக்கம், துணிவு, அன்பு, இளமை, முதலிய முப்பத்திரண்டும் இவைபோல் வனவும் உடம்போடு கூடிய உயிரின் குணங்களாம். துய்த்தல், துஞ்சல், தொழில், அணிதல், உய்த்த லென்னுமைந்தும் உடம்போடு கூடிய உயிர்த்தொழில்களின் குணங்களாம்.

      ஓரறிவுயிர் முதல், உயிர் ஐவகையாமென்பது: -

ஓரறிவுயிராவது: - புல், மரம் முதலியன. இது ஸ்பரிசத்தை யறிகிறதாம். ஈரறிவுயிராவது: - இப்பி, சங்கு முதலியன. இது ஸ்பரிசத்துடன் நாவினாலிரத த்தையுமறிவதாம். மூவறிவுயிராவது: - கறையான், எறும்பு முதலியன. இது ஸ்பரிச ரசத்துடன் மூக்காற் கந்தத்தையுமறிவதாம்.  நாலறிவுயிராவது: - தும்பி, வண்டு முதலியன. இது ஸ்பரிச, ரச, கந்தத்துடன் கண்ணால் ரூபத்தையுமறிவதாம்; ஐந்தறிவுயிராவது: - தேவர்கள், மனிதர், நரகர், மிருகங்கள், பரவைகள் முதலியன. இது ஸ்பரிச, ரச, கந்த, ரூபத்துடன் செவியாற் சபதத்தையுமறிவதாம். “வானவர் மக்கணரகர் விலங்கு புள் ஆதி செவி யறிவோ யடையறிவுயுரே” என்று நன்னூல் சூத்திரம்.

ஆறறி வுயிரென்பது: - மக்கள், ஸ்பரிச, ரச, சந்த, ரூப, சப்தமென்பவைகளுடன் தன்னைப்பகுத்தறியும் அறிவையுமுடையதாம். “மக்கடாமே ஆறறிவுயிரே” என்று தொல்காப்பியத்தறிக.

தேகம்.

தேகமாவது: - தேகம் அவரவர் கையால் எட்டு சாண் அதாவது 96 விரற் கடை நீளம், சாண் பருமன், மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்துருபுகளும், செவி 2, நாசி 2, கண் 2, வாய் 1, குய்யம் 1, குதம் 1, ஆக 9 வாயல்களும், ஞான கன்மேந்திரியங்கள் 10, அவைகளின் விஷயங்கள் 10. அந்தக்கரணங்கள் 4, வாக்குகள் 4, பூதங்கள் 5, அவைகளின் காரியங்கள் 25, அகங்காரங்கள், 3, குணங்கள் 3, வித்தியா தத்துவங்கள் 7. சுத்ததத்துவங்கள் 5, வாயுக்கள் 10, நாடிகள் 10 மாகதத்துவங்கள் 96 அடங்கிய தெனப்படும். சர்மம், உதிரம், நரம்பு, அஸ்தி, தசை, மச்சை என்னும் தத்துவங்களாலாகிய தூல உடம்பு அழியத்தக்க தென்றும், வாயுவாலாகிய உடம்பென்னும் சூக்கம தேகம் ஒருக்காலுமழியத்தக்கதல்ல வென்றுங் கூறப்படும்.

தேகசித்தி தந்திரங்களாவன: - உயிரைப்பெற்று வாழ்வதும், உயிர்க்கு உறுதியாயிருப்பதுவும், ஆயுள் அளவைக் காட்டுவதுவும், உத்தமனைக் காண்பதுவும், இந்தவுடம்பின் பயனாயிருப்பதால் அது அழியாவண்ணம் அதை வளக்ககாய சித்தி தந்திராதிகளை அறியும்வகை தேடவேண்டிய தவசியமென்று சொல்லப்படும். நாசிக் கதோமுகம் அதாவது கீழ் நோக்கியமுகம் 12 அங்குலமென்றும், இதை உள்ளத்தி வைத்து நினைந்திருப்பவர்களுக்கு மாசித்தியும், மாயோகமும் வந்து வாய்க்குமென்றும், தேகத்துக்கு அழிவேயில்லை என்று முணர்த்தப்படும். வளியாகிய காற்றை வாங்கி வயிற்றில் அடைக்கிடில் தேகம் பழுத்திருந்தாலும் பிஞ்சி போலாகுமாம். புறப்பட்டு திரியாநின்ற வாயுவை நெறியாக உள்ளே வசப்படுத்த தேகம் சிவந்து மயிர் கருக்குமென்றும், உள்ளே நின்ற சிவன் வெளிப்படானென்றுஞ் சொல்லப்படும். இரண்டு கண்களையும் நாசிமேல்வைத்து வாயுவை யுள்ளேயடக்க தேகத்துக்கு அபாயமே இல்லை என்றும், இரண்டு நாட்டமும் நடுமூக்கின்மேல் வைக்க தேகத்துக்கழிவேயில்லை என்று முணர்த்தப்படும். எங்கே யிருக்கினும் பூரகம் செய்து நிற்க தேகத்துக்கு அழிவேயில்லையாம். லேசாக ரேதகம் செய்து தசநாடிகளிலும் பூரித்து பிராணன் அபான்னென்னும் வாயுக்களில் கும்பித்திருந்தால் நமனே இல்லையாம். மூலத்தில் முக்காரமிட்டு மேல் துவாரத்தின் மேல் மனம் வைத்துக் கண்ணை விழித்திருந்தால் காலத்தை வெல்லலாமென்க. மூலத்துக்கு இருவிரன்மேலும் யோனிக்கு இருவிரற்கீழும் இருக்கும் குண்டலிக்குள் எழுகின்றசுடரானது நாபிக்கு நால்விரற்கீழென்றறிக. நாபியகத்தின் கண் நோக்கியிருந்தால் உடம்பு துஞ்சமாட்டாதெனப்படும். புருவமத்தியில் நின்று புண்ணியனைக்கண்டால் உடம்பு உருவற்று நிற்குமாம். மயிர்க்கால் வழியாக மாய்கின்ற வாயுவை உயிர்ப்பின்றி யுள்ளே அடைக்கிடில் உடம்பு அழியாதெனப்படும். வாயுவினுடைய வகுப்புகளை அறிந்தால் ஆயுள்வளருமாம். நாடி பழக்கத்தை அறிந்தடக்க நீ டொளிகாணுமாம். அண்ணாக்கை அடைத்து அமுர்தம் உண்டால் விண்ணோர்கெல்லாம் வேந்தனாகலாமென்க. தீயாக உள்ளேதெளிவுற நோக்கிடில் உடம்புமாயாதென்க. உடம்பில்லையாயின் உணர்வில்லையாம். ஒசை உணர்வுகளெல்லாம் உடம்பின் பயனேயாகுமாம்.

இவையெல்லாம் திருமூலர் திருமந்திரம், ஒளவையார் குறள், அகத்தியமாமுனிவர், சட்டைமாமுனிவர் இவர்கள் நூல்முதலியவைகளில் அறிக. அனுபவத்துக்குரியன.

பிரத்தியாகராமாவது: - மனதை இந்திரிய விஷயங்களிற் செல்லவொட்டாமல் நிருத்துதல் யோகமும், சர்வம் பிர்மமயமாய்ப்பார்ப்பது ஞானமுமாம்.

பரமதாரணையாவது: - பஞ்சபூதங்களை மகாபூதங்களிலும் மகாபூதங்களையும் மாயையையும் ஆத்ம சொரூபத்திலும் ஒடிக்கி நான் சின்மாத்திரனென்று மனதில் தரித்து நிற்பது பரமதாரணை எனப்படும்.

தியானமாவது: - மனதை மூர்த்திவடிவமாக்கி மற்றொன்றிலும் பொருந்தாமற் செலுத்துதல் யோகத்தியானமும், தெகாதீதமாயும் திருக்கு ரூபமாயும் இருக்கின்ற சின்மாத்திரத்தை நானென்று தியானிப்பது பரமதியானமுமாம்.

சமாதியாவது: - சரீரவாதனைகளின் உணர்வற்று ஸ்தம்பமாய் பிரம்மசொரூபத்திற்கலந்து தேகத்தை அசைவற நிறுத்தி சின்மயத்தில் நீடுழிகாலம் நின்றுவிடுதலே சமாதி யாமென்க. சமாதி சவிகற்பம் நிருவிகற்பமென விருவகைத்தாம். சவிகற்பசமாதியாவது: - மனமானது சின்மாத்திரமாகிய பிரமத்தினிடத்திலே சின்மாத்திரமாக விளங்குதலாம். நிருவிகற்பசமாதியாவது: - ஞாதுரு ஞானம் ஞேயம் என்கிற மனோவாசனையுநீங்கிபிரம்மஸ்வரூபம் தானானதேயாம். “ஆங்கணங்குறித்த அம்முதற் பொருளொடு தான் பிறனாகாத்தகையது சமாதி” என்று ஈசாவாஸ்ய உபனிஷதிற் கூறப்படும். மோட்சதாகங்கொண்டவன் தியான சமாதிகளை அவசியம் செய்யவேண்டுமெனப்படும். சீவனுக்கும் பரனுக்கும் ஐக்கிய அபேத்தியானம் பிறக்கிறதே யோகமெனப்படும்.

ஐக்கியசமாதியாவது: - தூலதேகத்தை விராட்டிலும், விராட்டைச்சத்தத்திலும், சத்தத்தைச்சுத்தத்திலும், சுத்தையதார்த்தத்திலும், சூட்சுமசரீரத்தை யிரணியகற்பத்திலும், இரணியகற்பத்தைச்சித்திலும், சித்தைச் சூன்னியத்திலும், சூன்னியத்தை ரகசியத்திலும், காரணசரீரத்தை மாயையிலும், மாயையை ஆனந்தத்திலும், ஆனந்தத்தைச் சுபாவத்திலும், சுபாவத்தையறுதியிலும், சீவனை ஈஸ்வரனிலும், ஈஸ்வரனை பரப்பிரமத்திலும், பரப்பிரமத்தை யொழிவிலும், யொழிவை யொடுக்கத்திலும், சாக்ஷியைப்பிரமத்திலும், பிரமத்தை சர்வசாக்ஷியிலும், சர்வசாக்ஷியை அதீதத்திலும், அதீதத்தை மனத்திலும் ஒடுக்கி யொடுங்கினால் ஒடுங்காமலிருந்தது நிஜபதமாம். தத்பதம், தொம்பதம், அசிபதம், அதிபதம், நிஜபதம், யெனப்பதங்களைந்தாம். உண்மைப்பொருள் விளக்கத்தில் இவைகளின் விரிவறிக.

ஐவகை சமாதியாவது: - நாதாந்ததத்துவசமாதி, விகற்பசமாதி, நிருவிகற்பசமாதி, சஞ்சாரசமாதி, அருள்பெருகுஞ்சமாதி யென வைந்தாம்.

சமாதி அளவு முதலியன: - ஏதோரிடத்திலே 10-அடி சதுரம் 2- அடி ஆழமாக்கி யதன்கீழே நாலடியில் எண்சாணீள ஆழமாக்கி கற்பொடி செங்கற்றூள் திருநீறு மூன்று மொன்றாகச் சேர்த்து கிரகமாக்கிக்கொள்ள வேணுமாம். பால் இளநீர் தேன் தண்ணீருங்கூட்டி நன்றாயபிஷேகம் செய்து துவட்டி அரையில் பட்டுவஸ்திரங் கட்டி தேகமெல்லாம் விபூதிதூளிதஞ் செய்து புருவமத்தியில் திலதப் பொட்டிட்டு தங்கத்தால் பட்டஞ்செய்து அதிலே பஞ்சாக்ஷரத்தை மாறிப்போட்டு நெற்றியில் பட்டங்கட்டி சுகுந்த மலர்மாலை சாத்தி சமாதி செய்யவேண்டுமெனப்படும்.

சமாதி க்ஷேத்திரங்களாவன: - ஞானவான்களும், சித்புருஷாளும் அடங்கிய சமாதி ஸ்தானங்களில் விமர்சை யாயிருக்கும் சில க்ஷேத்திரங்களாவன: - சிதம்பரம், திருமூலரும் மற்றும் பதினெண்மரும், காஞ்சிபுரம் காளத்திநாதர், கும்பகோணம் கும்பமுனி. மயிற்றேசம் மச்சைமுனி. சீகாழி சட்டைமுனி. நாகப்பட்டணம் அழுகண்ணிசித்தர். இடைக்காட்டூர் இடைக்காடர், மதுரை சுந்தரர், கமலமுனி, துவாரகை பாம்பாட்டி சித்தர். நாங்கணாச்சேரி பிண்ணாக்கீசர், திருக்கணங்குடி கொங்கணர், வைத்தீச்சுரம் வசிட்டர், திருவை வால்மீகர், திருவையாறு அகப்பைசித்தர், காளாஸ்தி கருவூரர். காசி விஸ்வாமித்திரர். கடுவெளி கடுவெளி சித்தர். இப்படியே புராதன க்ஷேத்திரங்களிலெல்லாம் கண்டசமாதியுற்றும் மகாசமாதியுற்று மிருக்கக் காரணமாம். வாசியோக ஹடயோக இலம்பிகா யோக முதலியவைகளினனுசாரமான சமாதி கண்டசமாதியெனப்படும். கடத்தைத் தகிக்கவிடாது சகுண மூர்த்தி கரத்திற்காக அளவையான் சமாதி பிரதிட்டை செய்வதெனப்படும். சமாதியில் 64 சித்தியுமுண்டாமென்று சொல்லப்படும். “சமாதியிலெட்டெட்டு சித்தியுமாகுமே” என்று திருமூலர் திருமந்திரம்.

உ – ம். “கற்பனையற்று கனல்வழியே சென்று, சிற்பனை யெல்லாஞ் சிருட்டித்த பேரொளி, பொற்பினைநாடிப் புணர்மநியோடுற்று, தற்பரமாகத்தகுந்தண் சமாதியே” என்றும், “காரியகாரணமாயத் தவத்திடைத் தாரிய தற்பரஞ்சேர்தல் சமாதியே” என்றும் திருமூலர் திருமந்திரம். “சமாதியென்றால் அறையல்ல குகைதானல்ல தாயாரை நிருத்துவதே சமாதியாகும்” என்றும், “சமாதியிலிருந்து மனந்தேறிக்கொண்டால் சாவது தானில்லையப்பா சாக்ஷிதானே” என்று கூறியிருப்பதையும் “நிர்மலம் தம் விஜாநியாத்ஷடூர்மி ரஹிதம் சிவம் ப்ரபாசூன்யம், மனோசூன்யம் புத்திசூன்யம் நிராபாசம் சமாதிஸ்ய லக்ஷணம்” என்று உத்தர கீதையில் கூறுவதையுமறிக.

அஷ்டசித்திகளாவன: - அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமிய, ஈசத்துவம், வசித்துவம், என எட்டாம். இந்த அஷ்ட சித்திகளும் தசதீட்சை பெற்றவர்களிடத் தாடுமெனப்படும்.

 

அஷ்டசித்தி தசதீட்சா மந்திரங்களாவன: - (1) அம் என்று ஒரு மண்டலஞ் செபிக்க நமனணுகான், தேகம்வலு வாய்சித்துண்டாமென்க. (2) உம் என்று ஒரு மண்டலஞ் செபிக்க அருளுண்டாகுமாம். (3) சிம் என்று முழுமனதோடு செபிக்க முத்தியுண்டாகுமாம். (4) நம் என்று அருளையன்பாக நோக்கி செபிக்க சத்திசிவம் தானாகுவராம். (5) தம் என்று வானோக்கிசெபிக்க தேகம் உறுதியாகுமாம். (6) அங் என்று செபிக்க தேகம் பக்குவமாகுமாம். (7) ரம் என்று செபிக்க திகுவிஜயஞ் செய்யலாகுமாம். (8) கம் என்று பிரமபதியினிடமாக வையகத்தில் நிற்க தொல்லைகளற்று தில்லைதரிசனமும் சித்துக்களு முண்டாகுமாம். (9) ரும் என்று செபிக்க சின்மயதரிசனமும் முத்தியுமுண்டாகுமாம். (10) மம் என்று அனுதினமு முச்சரிக்க பிறவி நீங்குமெனப்படும். மச்சைமா முனிவர் நூலிற்சொல்லப்படும். உதாரணம் உண்மைப்பொருள் விளக்கத்திலறிக.

அஷ்டகன்மச்சித்துக்களாவன: -   ஸ்தம்பனம், மோகனம், வசியம், மாரணம், உச்சாடணம், ஆக்ருஷணம், வித்துவேஷணம், பேதனம் என எட்டு. விவரம் உண்மைப் பொருள் விளக்கம் 185-வது பக்கத்தில் விரிவாயறிக.

பூகோளம்: - இரவு, பகல், பெளர்ணமியென்றது: - சர்வபுரத்திலும் நக்ஷத்திரங்களாற் சூழப்பட்டு வுருண்டை வடிவாயிருக்கிறதென்னு மிந்தப்பூமி சூரியனைச்சுற்றி வருகிறதென்றும், சூரியனைவலம்வர 365½ நாட்செல்லு மென்றும், தனக்குத்தானே இந்தப்பூமி 24 மணி நேரத்துக்குள் சுற்றிக்கொள்ளுகிற தென்றும், இதனால்தா னிரவுபகலாகிற தென்றுஞ் சொல்லப்படும். பெளர்ணமி யென்றது: - பூமியானது சூரியனுக்கும் சந்திரனுக்கும் சமநிலையில் நிற்குங்காலம் பெளர்ணமியாம். மதிபூரணைகாலமானது நிட்டைசாதனத்துக்கும், உபதேசம் செய்வதற்கும் அனுகூலமான காலமெனப்படும். இராகு கேது கிரகங்களென்பது: - இராகுவும் கேதுவும் முறையே சந்திரனது எறு இரங்கு சாயைகளென்றும், ராகு கேதுக்களைச் சாயைக் கிரகங்களென்று சொல்லப்படுமென்றும், யதார்த்தத்திற் சூரிய சந்திரர்களை ராகு கேதுக்கள் பிடிக்கிறதில்லையென்றும், சர்வகாலமும் பகற்காலத்தில் சூரியன் உருமத்தையடைகிறானென்றும், சூரியன் மேருவை யிடதுபாரிசத்திலிருந்து பிரதக்ஷணம் பண்ணுகிறானென்றும், எவ்விடத்தில் சூரியன் உதயமாகிறானோ அதற்கு நேரான திக்கில் அஸ்தமனமாகிறனென்றும் சொல்லப்படும். பாகவதம் பஞ்சஸ்காந்தம் 21, 24 அத்தியாயங்களிலறிக.

அக்கரங்களுக் காதிகாரணங்களாவன.

அக்கரங்களுக் காதிகாரணம் மூலமந்திரம், பஞ்சாக்ஷரங்களுக் காதிகாரணம் பிரணவம், அந்தப் பிரணவசம்பந்தமான அகார உகார மகாரமெனு மக்கரங்களுக் காதிகாரணம் வைகரியென்னும் வாக்கு, அந்த வைகரிவாக்குக் காதிகரணம் சூக்குமையென்னும் வாக்கு, அந்த சூக்குமைக் காதிகாரணம் விந்து தத்துவத்தைக்கடந்த நாதமாம். சூக்குமை வாக்கு சூக்காதியும், பைசந்திவாக்கு கொஞ்சம் வார்த்தைகளும், மத்திமை வாக்கு மெத்தனவும் பேசுமாம். வைகரிவாக்கு வினைகளையும் சவுரியங்களையும் செய்யுமாம். எழுத்துகளின் குறிக ளழிந்துபோமெனவும் பொருளழியாதெனவும்படும்.

உ - ம்.  “சூக்குமை பைசந்தி மத்திமைசொல் வைகரியென், றாக்கு மிவற்றின்பே ரடைவறியச் – சூக்குமை தான், பந்தித்தான் மாவுணர்வைப் பைசந்தி மத்திமையா, மந்தத்திற் றாலவெழுத் தாம்” என்றும், “பாவா யியலாகி நூலாய்ப் பரந்திலங்கு, மோவாதே மத்திமையி னின்று” என்றும் சிவஞானசித்தியாரிற் காண்க.

மந்திர விளக்கம்.

ஊமை யெழுத்து: - ஊமை யெழுத்தானது வேதமறியாத பரமெனப்படும். இந்த ஊமையெழுத்திலிருந்தே பிரணவ முதித்ததென்றும், இது பேசாவெழுத்தென்றும், ஓரெழுத்தென்றும் ஓர்மொழி மந்திரமென்றும், பிரமஸ்வரூபமென்றும், பிரணவ மூலமந்திரமென்றும், சாயிச்சிய பதவியைத் தரத்தக்கதென்றுங் கூறப்படும். ஊமையெழுத்து வுடலும், ஓ வென்றெழுத்து வுயிருமாம். தராதலம் படைக்க பெருவெளியே வீடாகக்கொண்டு பெருவிர லங்குஷ்ட்த்தால் பரமாத்மன் முத்தியினது துடையிலூன்றினதாயும், அதுவே ஊமை யெழுத்தானதாயும், அதை பொறுக்கமாட்டாமல் சத்தி ஒவென்ன அது ஓகாரமானதாயும். அப்பொழுது பரமாத்மன் அ என்ன அது அகாரமானதாயும், அப்பொழுது அடக்கமாய் சத்தி உ வென்ன அது உகாரமானதாயும், அகார உகாரங்கூடி ஓரெழுத்தானதாயும், இலக்கத்தில் (அ) எட்டு ஆகிய அகாரமும், (உ) இரண்டு ஆகிய உகாரமுங்கூடி தொகைக்கு (ய) பத்து ஆனது போல யகாரம் சீவனாதாயும், இந்த முறைமை திருமூலதேவருக்கு ஆதிகபிலமாமுனிவர் திருவள்ளுவ நாயனார் வடிவமாகத் தோன்றி திருவாய் மலர்ந்தருளினதாயும் சொல்லப்படும். அவ்வெழுத்து நாதமும், உவ்வெழுத்து விந்துவும், ஒவ்வெழுத்து மகம்மேருவும், ஒவ்வெழுத்தில் அகார உகார முதித்து நிற்குமெனவும், அகாரம் சிவம் உகாரம் சத்தியுமா மெனவும்படும்.

உ – ம். “ஊமை யெழுத்தே வுடலாச்சு, ஒவென்றேழுத்தே வுயிராச்சு” என்று கொங்கணமா முனிவர் ஞானக்கும்மியிலும், “ஓங்காரம் ஊமை தனிற்பிறக்கும், ஒவ்வெழுத்திலீரெழுத்து முதித்து நிற்கும்” என்று ஶ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் உடலறி விளக்கத்திலும், “அகார முதலாயனைத்துமாய் நிற்கும், உகார முதலா யுயிர்ப்பெய்து நிற்கும், அகார உகார மிரண்டுமறிய, அகார உகார மிலிங்கம் தாமே” என்று திருமூலர் திருமந்திரத்திலும், “எட்டிரண்டு முருவான லிங்கத்தே” என்று உண்மை விளக்கத்திலும், “எட்டிரண்டுங்கூடியே யிலிங்கமான தேவனை” என்றும், “ஈன்ற தாயுமப்பனும் இயங்குகின்ற நாதமும், தோன்றுமோ ரெழுத்தினோடு சொல்ல வேறுமில்லையே” என்றும், “அழிவிலாது நின்றதே அகாரமும் உகாரமும், குளிகையான சோதியுங் குலாவினின்ற தவ்விடம், வெளியதாகு மொன்றிலே விளைந்ததே சிவாயமே” என்றும் சிவவாக்கியர் நூலிலுங்காண்க.

ஓர்மொழியென்னும் ஓரெழுத்துபதேசமாவது: - ஞானமுண்டாய் பல நூல்களைக் கற்று அவைகளினுட்பங்களையும், தத்துவங்களையும் மறிந்தாலும், தன் ஸ்வரூப நிலையறிதற்கரிதாமெனப்படும். தன் ஸ்வரூப நிலை, ஞானாசாரியருள்ளக் களிப்புடன் உபதேசிக்குமிந்த ஓர் மொழியினாலன்றி ஏனையவற்றாலறியப்படமாட்டாதென்க.

ஓங்காரத்துள் ளொருமொழி யென்னு மிந்த ஓரெழுத்தைப் பேசா மந்திர மென்றும், சும்மாயிருத்த லென்றும், வாசியினாற் காட்டும் பேரின்ப வுண்மை என்றும், சின் முத்திரையாற் காடு மருத்த மென்றும், சொல்லாமற் சொன்னதென்றும், மொழியாலுரைக்கிற் குறிக்கப்படு மென்று திருநோக்கத்தாலும் விழியினாலுங் காட்டப்பட்ட தென்றும், இந்த் ஓர்மொழி யுபதேசம் பெற்ற சில மகான்கள் கூறியிருப்பதைப் யிதனடியிற் கூறுதும். “ஓங்காரத் துள்ளே யொரு மொழி” யென்று திருமூலர் திருமந்திரத்திலும், “தத்துவமுழுதுங் கசடற வுணர்ந்துக் தன்னிலை யறிவதற் கரிதாம், சுத்தமெய்ஞ் ஞான தேசிகன் மகிழ்ந்து சொல்லாமற் சொல்லுமோர் மொழியாம்” என்றும், “ஒரு மொழி யாலே சுருதி ஆகம நூல் உயர் புராணமெலா மொழியும், ஒரு மொழியாலே யண்ட பூதங் ளொடுங்கிடுக் தன்னிலை தோன்றும், ஒருமொழி சும்மா யிருத்தலா மதனா லொப்பிலாச் சிவபத மடைவார்” என்று நிஷ்டானு பூதியிலும், “மும்மாயைக் கப்பாலா முப்பாழுங் கண்டுநீ, சும்மா இருவென்று சொன்னாரம்மானை” என்று அத்துவிதக் கலிவெண்பாவிலும், “பெம்மான் முருகன் பிறவா னிறவான், சும்மா விருசொல் லறவென் றனுமே, அம்மா பொருளொன்று மறிந்திலனே” என்று கந்த ரனுபூதியிலும், “சும்மா விருக்கவைத்த சூத்திரமாம்” என்று ஒழிவிலொடுக்க நூலிலும், “சும்மா விருவென நீ சொல்லப் பொருளொன்றும், அம்மா யறிந்திலம்” என்று சந்நிதிமுறையிலும், “சொல்லாமற் சொன்னவரை நினையாம நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்” என்று திருவிளையாடற்புராணத்திலும், “கருணை விழியதனா லிருவினைக ளறநோக்கி யாணவமே போக்கி” என்று மஹா வாக்கியத்திலும், “விழியா லெனக்களித்தான் வீழ்த்தேனின் பமேவிட்டதே” என்று சிற்றம்பலநாடியிலும், “நாடியறை யும்பொருளை ஞானகுரு, நீடுமருட் கண்ணாலே காட்டும் கருணைப்பிரான்” என்று சிவானந்தமாலையிலும், “வற்றி யாருநின் மலரடி காணா மன்ன வென்னையோர் வார்த்தையுட் படுத்டி” என்று திருவாசகத்திலும், “பிரியாத தண்ணருட் சிவஞானி யாய்வந்து பேசரிய வாசியாலே பேரின்ப வுண்மையை யளித்தனை” என்றும், “சொல்லரிய நெறியை யொரு சொல்லா லுணர்த்தியே சொரூபானு பூதி காட்டி” என்றும் தாயுமான ஸ்வாமிகள் பாடலிலும், “சும்மா யிருக்க வைத்த சூத்திரத்தை நானறியேன்” என்றும், “வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம், முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே” என்றும் பட்டணத்து ஸ்வாமிகள் பாடலிலும், “வல்லவன் புகல்வன் வாழவொரு மோன மொழியால்” என்று தத்துவராய ஸ்வாமிகள் நூலினும், “உவமொப்பின்ஞான விழிபட்டுமுன்னை வினைவிட்டு முத்தியுலகில்” என்று சசிவன்ன போதத்திலும், “நீதத்திலே குரு சொல்லாமற்சொன்ன நிறையிதுவே” என்று கடவுளந்தாதியிலுங் காண்க.

மூலபீஜமந்திராக்ஷர் முதலியன, மூலபீஜாக்ஷரங்களைந்து: -

இது குருமுகமா யறிக. மூலமந்திரங்களாவன: - ஐயும், கிலியும், சவ்வும், ரீயும், ஶ்ரீயும் என வைந்து. பஞ்சபக்ஷி யெழுத்துக்களாவன: - அ, இ, உ, எ, ஒ வென உயிரெழுதுக ளைந்து. பஞ்சாக்ஷரங்கள்: - நமசிவய வென ஐந்து. 51 இலக்கங்களாவன: - 10, 18, 4, 13, 6 ஆக 51. இந்த இலக்கங்கள் நகாரத்துக்கு 10ம், மகாரத்துக்கு 18ம், சிகாரத்துக்கு 4ம், வகாரத்துக்கு 13ம், யகாரத்துக்கு 6மாக 51 இலக்கமென்க. பஞ்சபக்ஷி யெழுத்துக்களாவன: - அ இ உ எ ஒ யென்பவைகள். வல்லூரு, ஆந்தை, காகம், கோழி, மயில் யென்னும் பஞ்சபக்ஷிகளின் ஊண், நடை, அரசு, துயில், சாவு யென்னும் ஐந்து தொழில்களுக்குமுரிய உயிரெழுத்துக்களாம். தேவதாக்ஷரங்களாவன: - பரம், பரன், பரை, பரகுடிலை, பரநாதம், பரவிந்துவென ஆதாமாறாம். ஹரிம் பரனெழுத்து. ஓங்காரம் பரையெழுத்து. ரிங்காரம் பரகுடிலைவெழுத்து, ஶ்ரீங்காரம் பரவிந்துவெழுத்தென்க. ஶ்ரீங்காரத்திலே யகாரம் சதாசிவ னெழுத்தென்றும், அந்த யகாரத்திலே வகாரம் மஹேஸ்வர னெழுத்தென்றும், அந்த வகாரத்திலே சிகாரம் உருத்திர னெழுத்தென்றும், அந்த சிகாரத்திலே மகாரம் விஷ்ணு எழுத்தென்றும், அந்த மகாரத்திலே நகாரம் பிரம்ம னெழுத்தென்றும், அந் நகாரத்திலே சர்வான்மாக்களும், அவ்வான்மாக்களிலே வான் வளி தீ நீர் மண்ணும், அம்மண்ணிலே அனல் முதலியவைகளும், அதில் சபத்ததாதுக்களும், நால்வகை யோனி, எழுவகைத் தோற்றம், எண்பத்து நான்கு நூறாயிரம் சீவபேதங்களும் தோன்றினவென்றுஞ் சொல்லப்படும்.

சிதம்பரச்சக்கரம்: -    பொன் வெள்ளி செப்புத்தகடு அல்லது சந்தனப்பலகை அத்திப்பலகை யிவைகளி லெதிலாகிலும், நேறே ஆறுகோடு கீறி குறுக்கே ஆறுகோடு கீறவுண்டாகும் அரைக ளிருபத்தைந்தில் நமசிவய மென்னும் பஞ்சாக்ஷரங்களைப் பிரித்துமாறி, அரைகளுக் கொவ்வோ ரெழுத்தாக அடைத்து அததற்குரிய மூலபீஜம், மூலபஞ்சாக்ஷரம், உச்சரிப்பு மந்திரம், இலக்கம் இவைகளை அடியிற் கண்டபடி அந்த பஞ்சாக்ஷர எழுத்தின் கீழ் சேர்த்துக் கொள்ள அது சிதம்பரச்சக்கர மாயிற்றென்க. முதல் ஐந்தரைகளில் போடும் சிவயநம வென்னும் பஞ்சாக்ஷரங்களில் சிகாரத்தின் கீழ் மூலபீஜ எழுத்தும், மூலபஞ்சாக்ஷரம் அதாவது பஞ்சபக்ஷி (உயிரெழுத்து) அகாரம், உச்சரிப்பு மந்திரம் ஐயும், இலக்கம் நாலு (4)ம், வகாரத்தின் கீழ் மூலபீஜம், மூலபஞ்சாக்ஷரம் அதாவது பஞ்சபக்ஷி உயிரெழுத்து இகாரம், உச்சரிப்பு மந்திரம் கிலியும், இலக்க்ம் பதின்மூன்று (13)ம், யகாரத்தின் கீழ் மூலபீஜ எழுத்தும் மூல பஞ்சாக்ஷரமாகிய பஞ்சபக்ஷி உயிரெழுத்து உகாரம், உச்சரிப்பு மந்திரம் சவ்வும், இலக்கம் ஆறு (6)ம், நகாரத்தின் கீழ் மூலபீஜ யெழுத்தும், மூலபஞ்சாக்ஷரமாகிய பஞ்சபக்ஷி உயிரெழுத்து எகாரம், உச்சரிப்பு மந்திரம் ஶ்ரீம், இலக்கம் பத்து (10)ம், மகாரத்தின் கீழ் மூலபீஜவெழுத்தும், மூல பஞ்சாக்ஷரமாகிய பஞ்சபக்ஷி உயிரெழுத்து ஒகாரம் உச்சரிப்பு மந்திரம் ரீம், இலக்கம் பதினெட்டு (18) மாக சேர்த்தணைத்துக்கொள்ள வேண்டுமாம். கோடுகளின் வெளிப் பக்கத்தில் சூலம் போட்டுக்கொள்ள வேணுமாம். முதல் ஐந்தரையில் சிவயநம வென்றும், இரண்டாவது அரை ஐந்தில் யநமசிவ யென்றும், மூன்றாவதரை ஐந்தில் மசிவயந யென்றும், நான்காவதரை ஐந்தில் வயநமசி என்றும், ஐந்தாவதரை ஐந்தில் நமசிவய என்றும் மாறியடைத்டுஹ் அததற்குரிய மூலபீஜமுதலியவைகளைச் சேர்த்து அந்த சக்கரத்தைப் பூசையில் வைத்து நமசிவய வெனும் பஞ்சாக்ஷரத்தின் நடுவணையைப்பிடித்து அதாவது சிவயநம வென்று செபிக்க சிதம்பர நடனமும், யநமசிவ வென்று செபிக்க கனக சபை தோன்றி கனகமும், மசிவயந வென்று செபிக்க நடராஜர் தரிசனமும், வயநமசி யென்று செபிக்க காயசித்தியுமுண்டாமென்றும், நமசிவய வென்று செபிக்க சிதம்பரமேயாகுமென்றும், பூரணத்தை காணலா மென்றும், ஐந்தெழுத்துக்கும் உயிர் சிதம்பரமே என்றும் சித்துக்களாடலா மென்றுஞ் சொல்லப்படும். ஒவ்வொரு பஞ்சாக்ஷரமும் நூற்றெட்டு உருவேற வேணுமாம்.

      சகல ஸ்தலங்களிலு மிந்தப்படியே சக்கர ஸ்தாபிதங்கள் செய்யப்பட்டிருக்கு மென்றும், சரியாக சக்கரஸ்தாபிதமில்லாத ஸ்தலங்கள் சீரணமாகிற தென்றும், பிருதிவி காஞ்சி, அப்பு ஜம்புகேசுரம், தேயு திருவண்ணாமலை, வாயு காளாஸ்திரி, அகாயம் சிதம்ப்ரமென்னுமிவைகளே பஞ்சஸ்தலங்களென்றுஞ் சொல்லப்படும்.

பிரணவம்.

      வேதமறியாத பரமாகிய ஊமையெழுத்திலிருந்துதித்த தென்னு மிந்தப்பிரணவத்தை விட்டு நீங்காத அகார மகாரவிந்து நாத உகாரமென்னும் மூலபஞ்சாக்ஷரங்களே அந்த பிரணவத்துக்குள்ளொளி யென்றும், அகார உகார மகார விந்து நாதமெனு மைந்தையும் பஞ்சகலைகளையுங் கூட்டி சப்திக்க ஓங்காரம் பிரணவமானதென்றும், அகாரம் பிரம்மா, உகாரம் விஷ்ணு, மகாரம் உருத்திரன், விந்து மஹேஸ்வரன், நாதம் சதாசிவனுமாக பஞ்சகிருத்யகர்த்தாக்களும் பஞ்சபூதங்களுக்கதி தெய்வங்களுமாமென்னும் சொல்லப்படும்.

      அகாரம் சூரியப்பிரகாசம் போன்ற மனதையும், உகாரம் சோமப்பிரகாசம் போன்ற புத்தியையும், மகாரம் அக்னிப்பிரகாசம் போன்ற அகங்காரத்தையும், விந்து தீபப்பிரகாசம் போன்ற சித்தத்தையும், நாதம் ஆதித்த பிரகாசம் போன்ற புருடனையுமாக அகார உகார மகார விந்து நாதமென்னு மைந்தக்கரங்களும் நிறை நிறையே யதிட்டித்து நின்று செலுத்துமெனப்படும். உள்ளம், மனம், புத்தி, சித்தம் அகங்காரமெனபவைகள். அந்தக்கரணங்களாம் உள்ளமென்றது – ஆகாயத்தின் விருத்தி அறிவெனப்படும். மனதுக்குச் சந்திரனும், புத்திக்கு க்ஷேத்திரஞ்சன் புத்தி நாம சத்தியும், சித்தத்துக்கு ஈசனும் அகங்காரத்துக்கு வுருத்திரனும் அதிதேவதைகளெனப்படும். மனம் வாயுவின் விருத்தி, புத்தி தேயுவின் விருத்தி, சித்தம் அப்புவின் விருத்தி, அகங்காரம் பிருதிவியின் விருத்தியுமாமென்க. மோட்ட நிலையடைந்துய்ய விரும்புந் தேவதைகளும், ஞானிகளும் சாதனை செய்வதற்கு நற்கருவியாய் நிற்பது இந்த ஓங்காரப் பிரணவமேயாமெனப்படும்.

      இந்தப்பிரணவம் பரப்பிரணவம் அபரப்பிரணவமென விருவகையாம். பரப்பிரணமாவது: - இது வாச்சியரூபம் ஒலிவடிவு சிவம் ஓம் என்பதாம். அபரப்பிரணவமாவது: - இது வாசகரூபம் நாதவடிவு சத்தியாம். ஆன்மாக்களுக்கு நன்மைகளை யெல்லாந் தருவதாம். இந்த அபரப்பிரணவத்தினின்றே இருக்கு முதலிய வேதங்கள் தோன்றினவாம். இந்த அபரப்பிரணவம் பர்ப்பிரணவத்தை யடைதற்குக்கருவியான தெனப்படும். எல்லாப் பொருளுந் தோன்றுவதற்குக் காரணமாயுள்ள அகார உகார மகாரமெனு மக்கரங்களின் வடிவாய், பரமசிவம் பிரதிவிம்பித்திற்கு விம்பமாய், அந்தப் பரமசிவமுந் தானும் இரும்பும் நெருப்பும் போலவொன்றாய் சிவவாசகமாயிருத்தலின் அவ்வாருள்ள அவ்வபரப் பிரணவந் தோன்றினதெனப்படும்.

      ஓம் என்னும் உத்கிருஷ்ணமான ஏகாக்ஷரம் பிரமஸ்வரூபமென்றும், பிரணவமென்றும், பிரகிருதிசம்பந்தமில்லாத ஆத்மஸ்வரூபமென்றும், பரப்பிரமம் அபரப்பிரமமென்று சொல்லப்படுமிரண்டும் பிரணவாட்சரங்களே யாமென்றும், பிரணவத்தை விட்டு நீங்காத அகார உகார மகாரமெனுமட்சரங்களில் அகாரம் பிரமா, உகாரம் விஷ்ணு, மகாரம் உருத்திரனுமாமென்றும், இந்த மூன்றெழுத்துஞ் சேர்ந்தே ஓ மென்று ஓரெழுத்தானதென்றும், இதை குருமுகத்திலறிந்து தனித்தனியேவாகிலும் ஒன்று சேர்த்துந் தியானித்துக்கொள்ளால மென்றும், இதை பிரதீகமாக அல்லது அபிரதீகமாக வுபாசிக்கிறவர்கள் அவ்வபரப்பிரமத்தை யல்லது பரப்பிரமத்தை விரும்பினபடியே யடைகிறார்களென்யென்று சொல்லுகிற இந்த எழுத்தே எல்லா உலகமுமாமென்றுஞ் சொல்லப்படும்.

      எல்லா மந்திரங்களிலும் சிறந்தது இந்தப் பிரணவமே யென்றும், இந்த ஓங்காரயில்லையாயின் தேவாதிமந்திரங்களி யக்கமின்றி சடமாகின்றனவென்றும், சமஸ்த வேதங்களுக்கும் இதிகாச புராணாதிகளுக்கும் மூலாதாரமாக முதன்மையாய் நின்றொலிப்பதென்றுங் கூறப்படும்.

      ஓம் நமோ நாராயணாய என்று வைணவ பெரிய திருமந்திரத்திலும், ஓம் பிரசன்னாஞ்சிநேயம் பிரபா திவ்யகாயம் என்று மாத்வர்களது திருமந்திரத்திலும், ஓம் பகவதி பாக்யவதி என்று சாக்தேயர்களது திருமந்திரத்திலும், ஓம் கஜமுகாய அஜ முகாய நம: என்று கணாதிபத்தியர்களது திருமந்திரத்திலும், ஓம் சரஹனபவஷண்முகதேவ என்று கெளமார்த்தர்களது திருமந்திரத்திலும், ஓம் கணபதியே நம: என்று கணபதி மந்திரத்திலும், ஓம் முதன்மையாக நின்றொலிக்கின்றதையறிக.

      வேதங்களுக்கெல்லாம் நானே பிரணவமாயிருக்கிறேனென்று ஶ்ரீ கிருஷ்ணபகவான் பகவத்கீதையிலும், நான் அகார உகர மகாரமாயிருக்கிறேனென்று மைத்தேயருக்கு மகாதேவன் வுபதேசித்தாரென்று மாண்டூக்ய வுபநிஷத் துவுவமிதியிலும், குருகுலவாசத்தா லறியத்தக்க பிரமஸ்வரூபமாயிருக்கிற இந்தப் பிரணவம் ஓமென்பதேயாம் என்று யமதேவன் நசிகேதஸென்பவருக்கு வுபதேசித்தாரென்று மாண்டூக்ய வுபநிஷத்து கெளடபாதக பிரணவத்தியான விதி மூன்றாவது வல்லியிலும், தைசதோபநிஷத்துலுங் கூறப்பட்டிருப்பதையுமறிக.

      குண்டலி சத்தியாவது: - குண்டலி சத்தியே குடிலையெனப்படும். அந்தக் குடிலையே பிரணவஸ்ரூபமாம். குண்டலிசத்தி பாம்புபோல் வளைவாய் சிருஷ்டி காலத்துலுண்டாய் அதன் மத்தியிலே நாதமுமுண்டாம். இதுவே ஞானமெனப்படும். இந்தக் குடிலையினிடத்து தான் ஆன்மாக்களொடுங்குமாம். அகாரம் உயிரும், உகாரம் பரமும், மகாரம் மலமும், சிகாரம் சிவமும், வகாரம் வடிவும், யகாரம் உயிருமாம். குடிலை – வடிவெனவும், குண்டலியென்னும் பதம் – இசங்கு, காளி, பாம்பு, பார்வதி யெனவும் படும்.

      வைணவமார்க்கம்: - ஓம் என்னும் பிரணவம் சமஸ்தபதமாய் அகண்டாகாரமாயும், வியக்தபதமாய் சகண்டமாயுமிருக்கிற அகாரங்களையுடையதெனப்படும். அகண்ட பிரணவத்துக்கு வாச்சியராயிருக்கிறவர் பரவாசுதேவரென்றும், அந்தப் பரவாசுதேவரை யுபாசிக்கிறவர் பரமபதத்தை யடைவரென்றும், அகாரம் சிற்சொரூபமான பரமாத்மாவுக்கும், உகாரம் சிற்சொரூபமான கிருபைக்கும், மகாரம் தாசனான சீவாத்மாவுக்கும் அறிகுறியாமென்றும் சொல்லப்படும்.

      உ – ம். “ஓமென்னும் பதமதனில் வேதமாதி வுற்பவிக்கும் ஆலம் வித்திலுகிக்குமாபோல், ஓமென்னும் பதமதனை யுணர்ந்தார் தானே யுணர்ந்தார்கள் வேதாதி யுரைகளெல்லாம்” என்று புஜண்டமா முனிவர் நூலிலும், அலகிய சீர் பிரணவத்தை யுணர்ந்தவரே வீட்டின்ப மடையவல்லார் என்று “அகஸ்தியமா முனிவர் நூலிலும்,” ஓங்காரமாய் நின்ற வத்துவிலே யொருவித்து வந்து, பாங்காய்முளைத்த பயனறிந்தால் பதினாலுலகும், நீங்காம நீங்கி நிலைபெறலாமிந்த நிச்சயந்தான், ஆங்கார மும்மத மற்றோருபதேச மாமனமே” என்று பட்டணத்து ஸ்வாமிகள் பாடலிலும், “அவ்வுடனுவ்வுமவ்வுமனம் புத்தி யாங்காரங்கள். செவ்விய விந்து நாதஞ்சித்தமோடுள்ளமாகு, மொவெனு மெழுத்தாமைந்து வுணர் வுதித்தொடுங்குமாறு, பெளவமுத்திரையும் போலும் பாரக்கிலிப்பண்புந்தோறும்” என்றும், “அயனரியானு மீசர்சதாசிவரதிதெய்வங்க, ளுபவருமவ்வோடுவ்வு மவ்விந்துநாதத்துக்குப், பயனுறி லஞ்சிலான்மா பரவிடின் சித்தாம்பார்க்கிற், சயமுறுவளியிரண்டுந் தவிற்று நிற்றானுந் தோன்றும்” என்று சிவஞானசித்தியாரிலும், “ஓங்காரம் ஊமைதனிற்பிறக்கு மொவ்வெழுத்தி லீரெழுத்து முதித்து நிற்கும்” என்று ஶ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் நூலிலும், “அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரமலமாய் வருமுப்பத்தாறிற், சிகாரஞ்சிவமாய் வகாரம் வடிவாய் யகார முயிரென்றறையலுமாமே” என்று திருமூலர் திருமந்திரத்திலும், “பூமனறியாப் பிரணவத்தின் பொருளைப்பகரும் பூங்கிளியே” என்று சந்நிதிமுறையிலும், “பிரணவந்தாரம் பிரமங்குடிலையெனுமோரெழுத்தின் பொருளை” என்று மயூரகிரி புராணத்திலும், “குத்திரமெய்ப்புற்றகத்து குண்டலிப்பாம் பொன்றாட்டுஞ், சித்தனவனைக் கண்டு தெரிசிப்பதெந்நாளோ” என்று தாயுமான ஸ்வாமிகள் பாடலிலும், “ஸிரிஷ்டி காலேது குடில: குண்டல்யாஸ்தித: தந்மத்யே ஞானமுத்பந்நம் தத் ரூபம் நாதமுச்யதே” என்று சுயம்பு ஆகமத்திலும், “ஓங்காரம் பிந்துசையுக்தம் நித்யம் தியாயந்தியோகினாம் தாமதம் மோக்ஷதம்சைவ ஓங்காராய நமோ நம” என்று சிவரகசிய மூலபீஜத்திலும், “பிரணவஸ் ஸர்வதேஷு” என்றும் “மேத்யம்பவித்ரமோங்கார ருக்ஸாம யசுரேவச” என்றும் பகவத்கீதையிலும், “அகாரஸ்சித் சொரூபஸ்ய விஷ்ணோர் வாசகயிஷ்யதே மகாரஸ்து தயோர்த்தாபியிதிப்ரணவலக்ஷணம்” என்று பிரணவாகாரமான ஓங்காரலக்ஷணமுங் கூறுகின்றன.

 

 

 

அஷ்டாக்ஷரங்களாவன.

      ஆம், ஊம், ஓம் சிவாயநம வென்பவைகள் அஷ்டாக்ஷரங்களெனப்படும். ஆம் என்றது அடி, ஊம் என்றது நடு, ஓம் என்றது திருமுடி, சி என்றது சிவம், வ என்றது சத்தி, ய என்றது சீவன், ந என்றது திரோதாய், ம என்றது மலர்ப்பாதமுமாம். ஓம் சிவாயநம யென்றது – நிராதாரம், ஓம் நமசிவாய என்றது ஆதாரம், ஓம் ஆம் அவ்வும் சிவாயயென்றது மீதானமுமாம். ஆதாரம் நடுமூலம், நிராதாரம் நடு இருதயம், மீதானம் புருவமத்தியமெனப்படும். புருவ மத்தியில் பேரொளிப்பிரபையே நிராதாரமாம். ஓம் என்றது உச்சியுமூலமுமொன்றா யூடுருவிநிற்குமாம். சிவாயவென்றது சோதிமயமாய் நிற்கும். அந்தச்சோதி புருவத்திடை, வெளி, உச்சி, உண்ணாக்கு மேலாய்காணவுந் தன்மயமாய் நிற்குமெனப்படும்.

      உ – ம். “அஞ்சு மூன்று மெட்டதா யநாதியான மந்திரம்” என்று சிவவாக்கியர் நூலிலும், ஞாலமதிலெட்டெழுத்துப்பேரை நயந்தறியாப் பேதையறிவில்லாரோடு என்று ஶ்ரீ சங்கராசாரையர் உடலறிவிளக்கத்திலும் காண்க.

பஞ்சாக்ஷரங்களாவன: - நான்கு வேதங்களிலு மெய்ப்பொருளாக நின்றது நமசிவயமென்னும் பஞ்சாக்ஷரங்களேயாம். “வேத நான்கினுமெய்ப்பொருளாவது நாதநாம நமசிவாயவே” என்று அப்பர் ஸ்வாமிகள் தேவாரம். இந்த பஞ்சாக்ஷரங்களே பஞ்சகலைகளுக்கும் பீஜமாம். நகாரம் பிரமா, மகாரம் விஷ்ணு, சிகாரம் வுருத்திரன், வகாரம் மஹேஸ்வரன், யகாரம் சதாசிவனுமாம். பிரணவமூல பஞ்சாக்ஷரங்களாகிய அகாரத்தில் யகாரமும், உகாரத்தில் வகாரமும், மகாரத்தில் சிகாரமும், சிகாரத்தில் மகாரமும், மகாரத்தில் நகாரமும் தோன்றினவாம்.

இந்த பஞ்சாக்ஷரங்கள் தூலசூக்குமகாரண மகாகாரண மாயிருக்குமாம். நமசிவய என்பது தூலபஞ்சாக்ஷரம் இது போதகாசாரியராலும், சிவயநம என்றது சூக்குமபஞ்சாக்ஷரம் இது சூசகாசாரியராலும் சிவயவசி என்றது காரண பஞ்சாக்ஷரம் இது வாசகாசாரியாலும், போதிக்கப்பட்ட வேண்டுமாம். வசிவ என்றது மகாகாரணம் இதை நிராசையால் போதிப்பவரே ஆசாரியராம். தொண்ணுற்றாறு தத்துவங்கள் இந்த பஞ்சாக்ஷரத்திலடங்கு முறைமை முதலியன முன்னமியற்றிய உண்மைப்பொருள் விளக்கம் ஞானானந்த விளக்கம் என்னு நூல்களில் விரிவாயறிக.

உ – ம். “நமசிவாய வாழ்க” என்று திருவாசகத்திலும், “நல்லகவிளக்கது நமசிவாயவே” என்றும் “நற்றுணையாவது நமசிவாயவே” என்றும் அப்பர் ஸ்வாமிகள் தேவாரத்திலும், “நவ்வெழுத்து மாணாக்கனேகேள் நான் முகனுமாகு மவ்வெழுத்துமாலாம், சிவ்வெழுத்து ருத்திரனுமாகுமென்றே செப்பு மகேசுரனும் வவ்வெழுத்தேயாகும், யவ்வெழுத்து சதாசிவனுமாகுமென்றே” என்றும் ஶ்ரீ சங்கராசரிய ஸ்வாமிகள் உடலறி விளக்கத்திலுங் காண்க.

தாரகமந்திரம்.

பெரியோர்களால் செபிக்கத்தக்க தென்னு மிந்ததாரக மந்திரம் அஷ்டாங்க யோகம் ராஜயோகம் ஹடயோகம் செபம் தபம் இவைகளையெல்லாம் சாதிக்கத்தக்க மந்திரமெனப்படும். குருமுகமாயறிந்து ஒவ்வொன்றையும் லட்சத்தெட்டு வுருவேற்ற நினைத்த காரியங்களனுகூலமாகுமாம்.

பிரணவம் ஓரெழுத்துடன் கூடினது: - (1) ஓம் நிர்க்குணப்பிரமம். – ஓம் நகாரம், ஓம் மகாரம், ஓம் சிகாரம், ஓம் வகாரம், ஓம் யகாரம். பரத்வம் நமோ நமஹா சித்தம். (2) ஓம் நிராகாரப்பிரமம் – ஓம் மகாரம், ஓம் சிகாரம், ஓம் வகாரம், ஓம் யகாரம், ஓம் நகாரம். பரத்வம் நமோ நமஹா சித்தம். (3) ஓம் நிரஞ்சனபிரமம் – ஒரு சிகாரம். ஓம் வகாரம், ஓம் யகாரம், ஓம் மகாரம், பரத்வம் நமோ நமஹா சித்தம். (4) ஓம் நிராமயப்பிரமம் – ஓம் வகாரம், ஓம் யகாரம், ஓம் நகாரம், ஓம் மகாரம், பரத்வம் நமோ நமஹா சித்தம். (5) ஓம் நிர்வீணப்பிரமம் – ஓம் யகாரம், ஓம் நகாரம், ஓம் மகாரம், ஓம் சிகாரம், ஓம் வகாரம். பரத்வம் நமோ நமஹா சித்தம்.

பிரணவம் இரண்டெழுத்துடன் கூடினது: - (1) நிர்குணப்பிரமம் – ஓம் ஙங், ஓம் மங், ஓம் சிங், ஓம் வங், ஓம் யங். பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (2) ஓம் நிராகாரப்பிரமம் – ஓம் மங், ஓம் சிங், ஓம் வங், ஓம் பங், ஓம் ஙங் பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தன். (3) ஓம் நிரஞ்சனப்பிரமம் – ஓம் சிங், ஓம் வங், ஓம் யங், ஓம் ஙங், ஓம் மங். பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (4) ஓம் நிராமயபிரமம் – ஓம் வங், ஓம் யங், ஓம் ஙங், ஓம் மங், ஓம் சிங். பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (5) ஓம் நிர்வீணப்பிரமம் – ஓம் யங், ஓம் ஙங், ஓம் மங், ஓம் சிங், ஓம் வங். பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம்.

பிரணவம் மூன்றெழுத்துடன் கூடினது: - (1) ஓம் நிர்க்குணப்பிரமம் – ஓம் ஙங் ஓ. ஓம் மங் ஓ, ஓம் சிங் ஓ, ஓம் வங் ஓ, ஓம் யங் ஓ. பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தன். (2) ஓம் நிராகாரப்பிரமம் – ஓம் மங் ஓ, ஓம் சிங் ஓ, ஓம் வங் ஓ, ஓம் யங் ஓ, ஓம் நங் ஓ பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (3) ஓம் நிரஞ்சனப்பிரமம் – ஓம் சிங், ஓ, ஓம் வங் ஓ, ஓம் யங் ஓ, ஓம் நங் ஓ, ஓம் மங் ஓ. பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (4) ஓம் நிர்மயப்பிரமம் – ஓம் வங் ஓ, ஓம் யங் ஓ, ஓம் நங் ஓ, ஓம் மங் ஓ, ஓம் சிங் ஓ. பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (5) நிர்வீணப்பிரமம் – ஓம் யங் ஓ, ஓம் நங் ஓ, ஓம் மங் ஓ, ஓம் சிங் ஓ, ஓம் வங் ஓ. பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம்.

பிரணவம் நாலெழுத்துடன் கூடினது: - (1) ஓம் நிக்குணப்பிரமம் – ஓம் நசி ஓ, ஓம் மசி ஓ, ஓம் அசி ஓ, ஓம் வசி ஓ, ஓம் யசி ஓ. பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (அசிஓமென்கிறதில் அகாரம் சிகாரமாகக்கொள்க.) (2) ஓம் நிராகாரப் பிரமம் – ஓம் மசி ஓ, ஓம் அசி ஓ, ஓம் வசி ஓ, ஓம் யசி ஓ, ஓம் நசி ஓ. பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (3) ஓம் நிரஞ்சன பிரமம் – ஓம் அசி ஓ, ஓம் வசி ஓ, ஓம் யசி ஓ, ஓம் நசி ஓ, ஓம் மசி ஓ, பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (4) ஓம் நிராமயப்பிரமம் – ஓம் வசி ஓ, ஓம் யசி ஓ, ஓம் நசி ஓ, ஓம் மசி ஓ, ஓம் அசி ஓ. பரத்வம் ஓம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம். (5) ஓம் நிர்வீணப் பிரமம் – ஓம் மசி ஓ, ஓம் அசி ஓ, ஒம் வசி ஓ, ஓம் யசி ஓ, ஓம் நசி ஓ. பரத்வம் நமோ ஹரி நமோ நமஹா சித்தம்.

பிரணவம் ஐந்தெழுத்துடன் கூடினது: - (1) ஓம் நிர்க்குணப் பிரமம் – ஓம் நமசிவாய. பரத்வம் நமோ நமஹா. (2) ஓம் நிராகாரப்பிரமம் – ஓம் மசிவயந. பரத்வம் நமோ நமஹா. (3) ஓம் நிரஞ்சனப்பிரமம் – ஓம் சிவயநம. பரத்வம் நமோ நமஹா. (4) ஓம் நிராமயபிரமம் – ஓம் வயநமசி. பரத்வம் நமோ நமஹா. (5) ஓம் நிர்வீணப்பிரமம் – ஓம் யநமசிவ. பரத்வம் நமோ நமஹா.

சத்திசிவபூசை.

சத்தியாவது: - சந்திரன் சாரம் அக்ஷரம் உகாரமாம். சிவமாவது: - சூரியன் சாரம் அக்ஷரம் அகாரமாம். சத்திசிவபூசையாவது: - சத்தியாகிய உகாரத்தில் சிவமாகிய அகாரத்தை நாட்டி நமசிவயென்றோத சிவ சத்திவொன்றாகுமாம். உகாரமுடன் அகாரம் சேர்த்து நமசியென்று ஒரு மண்டலஞ் செபிக்க தேகம் வசீகரமாய் வலுத்துநரை திரைமாறி ஒளி காணுமாம்.

மனோன்மணி பூசை.

அகாரமுடன் உகாரம் சேர்த்து நமசியென்று உரு செய்து விண்னோத்தி மகாரத்தை மேவ பராபரத்தினொளியும் ஆயிரத்தெட்டிதழ்களும் காணுமாம். இதழறிந்து பூசிக்க அமுதங்கசிந்து பாயுமாம். அந்த அமுதங் கொண்டால் மனோன்மணி பிரகாசிப்பவாம்.


மேருக்கர பூசை முதலியன.

சந்தணமரத்தில் சாணகலம் சாணீள முள்ளபலகைகளைக் கடைந்த நாலுகால்களில் சேர்த்தணைத்துக்கொள்ள அது மேரு சக்கரமாமென்க. தேகசுத்தி செய்து நீறுபூசி வங் என்று அகந்நியாசஞ் செய்து, அந்த மேருசக்கரத்துக்கு நீறு பூசி மாலைசாத்தி பழம் தேங்காய் தாம்பூலாதி நைவேத்தியஞ் செய்து மலராலர்ச்சித்து ரேசகபூரகும்பகம் செய்து கும்பகத்தில் மனம் பதிவாக நின்று பராபரத்தை நோக்கி சிவோகம் பிராணாயாமஞ் செய்ய பராபரத்தைக் காணலாமென்க.

கணபதி மந்திரம் சக்கரம் பூசை முதலியன.

கணபதி என்னும் பதமும், கணேசர் என்னும் பதமும் ஒரு பொருளுணர்த்தும் சொற்களாம். கண என்றது உயிர்களின் கூட்டமும், ஈசனென்றது அந்த யுயிர்களுக்குகாதாரமாய் நிற்கும் ஈஸ்வரனென்றும், கணபதி என்றது வுயிர்களின் கூட்டங்களுக்குக் கர்த்தா யென்றும், பொருளெனப்படும். கணேசரென்றது சாக்ஷியே தவிர வேறில்லையாம். வியாபக விளக்க அறிவே கணபதி வடிவமாம். மூன்று என்னும் இலக்கத்தை ஓர் பரிசுத்தமான எண்ணாகமதித்து அதற்கோர் அறிகுறியாக – அல்லது சுருக்கமாய் + இந்த அடையாளத்தைப் பெரியோரால் காட்டப்பட்டு, கணேசனென்னு நாமம் வழங்கிவருகிற தெனப்படும். “ஆக மெனுங் கோயிலின்கண் ணறிவென்னுங் கணபதிக்கே யன்பு செய்வாம்” என்றார் ஶ்ரீ சிவஞானவள்ளலார்.

தேவர்களை யுபாசிக்கு முறைமயில் முதன்மையாய் முதல்தெய்வமாக வணங்கப்படுவது கணேசரேயாம். இந்தக் கணேசரை கணபதி என்றும், பிரணவஸ்வரூபரென்றும், ஐங்கரத்தோன், யானைமுகன், அங்குசபாசமேந்தி, முக்கண்ணன், விக்கினேஸ்வரன், விநாயகன், பிள்ளையார் என்றும் இன்னும் அனந்தநாமங்களினாலும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

கணபதி மூர்த்தங்கள்: - மகாகணபதி, ஆதிகணபதி, வல்லபகணபதி, மூலகணபதி, சத்திகணபதி, நடனகணபதி, உச்சிட்டகணபதி, உக்கிரகணபதி என எட்டாம். இந்த அஷ்டமூர்த்தங்களுக்கும் மூல மந்திரங்கள் ஓம், கிலி, அங், உங் என்பனவாம்.

இந்தக்கணபதியை அட்சரஸ்வரூபங்களில் முதலெழுத்தென்றும், சகல ஆன்மாக்களுக்கும் பிரகாசியானின்ற சித்ரூபமென்றும், சுழுக்நை என்றும், பிரம ரந்திரமென்றும் திருக்குரூபமென்றும், மாணிக்க ஒளிபோன்ற தென்றும், ஞானசூரியனுதிப்பதற்கு மேருவென்றும், சச்சிதானந்த சொரூபமென்றும், மாயாவிநோதமான செகத்விளையாட்டையும் அந்த விளையாட்டொடுங்கின விடத்து கேவல நிலையையும் பார்ப்பதற்குப் புருஷாகாரியைப்போல நின்ற ரூபாரூபமென்றுஞ் சொல்லப்படும். இந்த ஸ்வரூபத்தை அகத்தின் கண் தினந்தோறுந் தியானஞ் செய்கிறவர்கள் அணிமா, மகிமா, லகிமா, கரிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவமெனும் அஷ்டசித்திகளையும் ஞானசம்பத்தையும், முத்தியையும் பெறுவரெனப்படும். “அததிமுகனடி நித்தம் நினைபவர் சித்தித் திருவொடு முத்திபெறுவரே” என்று நிஷ்டானுபூதி.

கணபதி சக்கரம்: - வெள்ளிமுதலிய தகட்டில் முக்கோணம் போட்டு அதனடுவில் பிரணவ ஓங்காரத்தை நாட்டி கோணமூலைகளுக்குச் சூலமிட்டுக்கொள்ள அதுவே கணபதி சக்கரமாம். அந்த சக்கரத்தை பூசையில் வைத்து அதற்கு அருகுமலர்கள் சாத்தி, சர்க்கரை பழம் சுண்டல்கள் வைத்து தேங்கா யுடைத்து தூபதீப நைவேத்தியங்காட்டி சதா சிவத்தைக் கருத்தி லூணி ஓம் கிலி அங் உங் கணபதியே நம வென்று செபிக்க விக்கினேஸ்வரர் பிரத்தியக்ஷமாய் நினைத்த காரியங்களை அனுகூலிப்பராம். விபூதி மந்திரம்: - இடது உள்ளங்கையில் விபூதியை பரப்பி அதில் கணபதி சுழியை நாட்டி சுடரைப்பார்த்து ஓம் கிலி அங் உங் கணபதியே நம வென்று இருநூற்றெட்டுதரம் செபித்து அந்த விபூதியைக் கொடுக்க சுரம், சன்னி, குன்மம், காசம், கர்ப்ப ரோகம், வயிற்றுவலி, கருப்பான், பலவிஷம், ஏவல், பயம், முதலியவைகள் தீருமாம். கணபதி சுழி என்றது பிள்ளையார் சுழி எனப்படும். விபூதியினால் அனேக அற்புதங்கள் திருஞானசம்பந்த சுவாமி முதலியவர்கள் செய்திருப்பதாக திருநீற்றுப்பதிகம் முதலியவைகளில் அறியலாம். “மந்திரமாவது நீறு வானவர்மேலது நீறு, சுந்திரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு, தந்திரமாவது நீறு சமையத்திலுள்ளது நீறு என்றும், “ஆற்றலடல்விடை ஏறும் ஆலவாயன் திருநீற்றைப், போற்றிப் புகலிநிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன், றேற்றித்தென்னனுடலுற்றதீப்பிணியாயின தீரச், சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே” என்றும் சம்பந்த ஸ்வாமிகள் பாடிய பத்து பாடல்களாலுமறிக.

சரஹணபகவான் சக்கரம் மந்திர முதலியன.

வெள்ளி செப்புத்தகடு முதலியவைகளிலெதிலாகிலும் அறுகோணம் போட்டு அந்த அறுகோணவீடுகளில் “சரஹணபவ” என்னும் ஆறெழுத்துக்களையும் பிரித்து வீட்டுக்கோரெழுத்தாக அந்த ஆறு வீடுகளில் அடைத்து, கோணங்களுக்கு வெளிப்பக்கம் சூலமிட்டு, சக்கரமத்தியில் ஓம் நமசிவய என்றெழுதி, அதன் அடியில் உகார யெழுத்தை நாட்ட அது சரஹணபகவான் சக்கரமாம். அந்த சக்கரத்தை பூசையில் வைத்து மலராலர்ச்சித்து பால் பழம் சுண்டல் தேங்காய் முதலிய நைவேத்தியஞ் செய்து தூபதீபம் காட்டி ஐயும், கிலியும், சவ்வும் ரீம் ஶ்ரீம் ஓம் சரஹணபவ ஷண்முகதேவா என்று கும்பகத்தில் நின்று நூற்றெட்டுதரஞ் செபிக்க சரஹணபகவான் பிரத்யக்ஷமாய் இஷ்டபூர்த்தி செய்வரெனப்படும். இந்த சக்கரத்தைக் குளிசமாக்கிக் கட்ட பில்லி சூன்னியங்களும் பேய் முதலியவைகளும் விலகிவிடுமென்க. இந்த மந்திரத்தால் விபூதிசெபித்துக் கொடுக்க பிணிமுதலியவைகளும் நீங்குமாம்.

வேறு அறுகோணம் போட்டு கோணமலைகளுக்குச் சூலமிட்டு மேல்கோண வீட்டில் சிவ என்றும், கீழ்கோண வீட்டில் மயம் என்றும், நடு வீட்டில் ஓம் என்றும் போட்டு, அந்த சக்கரத்தைப் பூஜையில் வைத்து “மாயா ரூப மஹேஸ்வரபுத்திரர் வேழ்வியிற்பிறந்த மேலாவாவா ஓம் ஷண்முகா சர்க குணநாதா வாவா சிவரேஷ்டா வாவா” என்று செபில்ல சுப்பிரமணியர் பிரத்யக்ஷமா இஷ்டபூர்த்தி செய்தரெனப்படும்.

ஆத்மபூஜை செபம்: - ‘ஓம் நமோ சித்திவியாகாயே சர்வகாரியாணி சர்வபயே நிவாரணாய ஓம் ஶ்ரீசுவாகா” என்று செபஞ்செய்ய வேணுமாம்.

பஞ்சகாவியம்: - இது மார்க்கண்டேயருக்கு நாரதர் செய்த காரியாணி சர்வதயே, நிவாரணாயே ஓம் ஶ்ரீ சுவாகா” என்று செபஞ்செய்ய வேணுமாம்.

சூரியசெபம்: - ஒம் ஶ்ரீம் குருபரப்பிரமணமே; என்று செபிக்க வேணுமாம்.

பெரியநாயகியை வாலிபூசித்தது: - அங்கம் புகழ மங்கை வடிவுகொண்ட ஆசசியே வாவா என்றும், ஓம் சர்வமண்டலமும் சிவமும் சத்தியும் சிவகாமியும் சர்வசர்க்கு குணேஸ்வரியும் வாவா என்றும் செபரூசெய்யதாரெனப்படும்.

      திரிபுரை விஸ்வரூபமந்திரம்: – அய்ய ஶ்ரீ சிவசங்கரி சிவயரீம் ஓம் என்று செபிக்க.

      சிதம்பரதில்லைகாளி செபம்: - ஓம் சங்கரி சாம்பவி ஓம் சடாதரி, சர்வலோக ஈஸ்வரி, ஸர்வதயாபரி வா வா என்று செபிக்க பிரத்யக்ஷமாய் இஷ்டபூர்த்தி செய்வளென்க.

      ருத்திரமூலமந்திரம்: - ஓம் அம் உம் அகோரருத்திரி வா வா என்று செபிக்க ருத்திரிபிரத்யக்ஷமா யிஷ்டபூர்த்தி செய்வளாம்.

      ருத்திரிவிஸ்வரூபம்: - ஓம் ஹரி அகோர ருத்திரி சிவய ரீம் ஓம் என்று செபிக்க, ருத்திரி பிரசன்னமாவளென்க.

      வித்தையுண்டாக: - ஹரி ஓம் ஆம் அவ்வும் சிவாய நமசிவாயவென்று செபிக்க வித்தையுண்டாகமென்க. பாடவல்லவனாகமந்திரம் – ஓம் ஐயும் சிவாயநமவென்று செபிக்கப் பாடவல்லவனாவனாம். நினைத்தகாரிய முடிய மந்திரம் – கிலியும் நமசிவயவென்று செபிக்க நினைத்தகாரிய முடியுமாம். பூமியுண்டாக – வங்நமசிவய என்று செபிக்க பூமியுண்டாம். வசியமுண்டாக – ஆலங்கே அங்சிவாய வென்று செபிக்க வசியமுண்டாகுமாம். ஆறுவிலகி வழிவிடமந்திரம் – இரீம் இரீம் சிவாயநம வென்று செபிக்க வேணுமாம். பூமியிலுள்ள தெல்லாமறிய மந்திரம் – இடங் இடங் ஓம் சிவாய சுவாகா யென்க. அஞ்ஞனமையுருகமந்திரம் அனுமார்செபம் – ஓம் சங்குருக சக்கர முருக இலையுருக இலையிலிருக்குமையுருக அஞ்சன தேவிபெற்ற அனுமந்தராயாவாவாவசிவசி வுருக ஸ்வாமி ஆணை சீக்கிரம்வுருக சர்வபாதாள முந்தெரிய சுவாகியென்று செபிக்க அஞ்ஞனமையுருகமென்க. வேறு ஓம் கணாதரூபாவநாதசித்தாலோகரூபா சக்கரசஞ்சிதா மாறு மாறு என்று செபிக்க அனுமார் பிரத்யக்ஷமாயிஷ்ட பூர்த்தி செய்வரென்க. கிங்கிலியர் அல்லது நவவீராள்மந்திரம் – ஓம் ஐயும் கிலியும் சவ்வும் கிலியும் நமசியென்று செபிக்கயாராகிலும் ஒருவர் பேரில் வேலை செய்தால் அவன் தேவதையே அவனைத் தாக்குமென்க.

தன்னைகட்டிக் கொள்ளமந்திரம் – ஹரி ஓம் உள்ளங்கால் பிடித்து உச்சியறுதியாக ஆகாசவாணி பூமிதேவியறிய பிரம விஷ்ணு வுருத்திரராகிய மும்மூர்த்திகளுமறிய என்னைக்காக்கசிவா யென்று செபிக்க வேணுமாம். நவக்கிரக தோஷமகல செபிக்குமந்திரம்: - ஓம் மிருத்தின சாயர் கிருஷ்ணவர்ணாய நீலகண்டாயா நம: என்று செபஞ் செய்க.

அக்நிதேவன் செபம் – ஓம் அக்நிதேவாய ரம்ரம் என்று அக்நிபட்டவர்களுக்கு மந்திரித்து ஊதிவிடில் குளிர்ந்து போகுமாம். மருந்தெதாகிலும் போடாததற்குமுன் மந்திரிதகால குளிரும் மருந்து போட்டதின்மேல மந்திரித்தால் கொப்பளங்காணுமாம்.

நாய் வாயகட்டவும் கட்டவிழககவும் மந்திரம் – அவவுட்டு கட்டி அரையிட்டு காள்பூட்டி மனவுட்டு கட்டிவை அதைக் குகையி டு இவ்வா பட சசி யினிவாபதிற்காவாம் வாவுட்டுகட்ட சிவனென்று சொல்ல வாய்கட்டுமாம்.

கடவிழ்க்கமந்திரம் – கலவ வில்லச் சொனனவ காவற பூ போலிறங்சகி வுள என்று சொல்ல கட்டவிழாது விடுமாம்.

லட்சுமிமந்திரம் – மகம எசிதம சொருபிதம் லட்சுமி யெனச்சோகரி வாவா என்றும் ஶ்ரீ லட்சுமி வா வா யென்றும் செபிக்கலாம் இப்படி செபிக்க லட்சுமி பிரசன்னமாவளாம்.

சரஸ்வதி மந்திரம் – சரஸ்வதி பிரானனம் பிரமமாக தினிவாவா என்று செபிகா மாயும் ஶ்ரீயும் சரஸ்வதி வா வா என்றும் செபித்துக்கொள்னவாம்.

அகஸ்த்தியர் மந்திரம் – நமசிவா அம்சம் மா மகத்தான அகசாரா என குருவோ நபீசா நம என்று செபிக்க வேணுமாம். நந்தி தரிசனமந்திரம் – நமசிவ பிரத்க்ஷணம் நந்திதரிசனம் என்று செபிக்க வேணுமாம் இந்த மந்திரத்தை செபித்து விபூதிபோட்டால் காப்பராமென்க.

முற்றிற்று.

# thathuva gnanayogamanthirathi , # thathuva gnani yogamanthirathi
To Top