திருவாசகம்
திருவெம்பாவை
(வெண்டளையான் வந்த
இயற்றவிணை கொச்சகக் கலிப்பா)
ஆதியும் அந்தமும்
இல்லா அரும்பெருஞ்
சோதியை
யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கள்
மாதே வளருதியோ
வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க்
கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து
போதார்
அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள்
கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி
பரிசேலோர் எம்பாவாய். 155
பாசம்
பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ
தெப்போ(து) இப் போதார் அமளிக்கே
நேசமும்
வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ்
சிலவோ விளையாடி
ஏசு மிடம்ஈதோ
விண்ணோர்கள் ஏத்துதற்குத்
கூசும்
மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன்
தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க்
கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156
முத்தன்ன
வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன்
அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப்
பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன்
பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம்
புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின்
அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார்
பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும்
வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157
ஒண்ணித்
திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக்
கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ
எண்ணிக்கொண்டுள்ளவா
சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத்
துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்
கொருமருந்தை வேத விருப்பொருளைக்
கண்ணுக்கு
இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உண்ணெக்கு
நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து
எண்ணிக் குறையில்
துயிலேலோர் எம்பாவாய். 158
மாலறியா
நான்முகனுங் காணா மலையினை நாம்
போலறிவோம்
என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலாறு தேன்வாய்ப்
படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே
பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட்
கொண்டருளிக் கோதாட்டுஞ்
சீலமும் பாடிச்
சிவனே சிவனேயென்(று)
ஓலம் இடினும்
உணராய் உணராய்காண்
ஏலக் குழலி
பரிசேலோர் எம்பாவாய். 159
மானே நீ நென்னலை
நாளை வந்துங்களை
நானே எழுப்புவன் என்றலும்
நாணாமே
போன திசைபகராய்
இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே
அறிவரியான்
தானேவந் தெம்மைத்
தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார்
கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய்
உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்குந்
தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 160
அன்னே இவையுஞ்
சிலவோ பலவமரர்
உன்னற்கு அரியான்
ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள்
கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னா என்னா
முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய்
என்னானை
என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்
சொன்னோம்கேள்
வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன்னெஞ்சப்
பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின்
பரிசேலோர் எம்பாவாய். 161
கோழி சிலம்புச்
சிலம்பும் குருகுஎங்கும்
ஏழில் இயம்ப
இயம்பும்வெண் சங்குஎங்கும்
கேழில் பரஞ்சோதி
கேழில் பரங்கருணை
கேழில்
விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன
உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான்
அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய்
நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே
பாடேலோர் எம்பாவாய். 162
முன்னைப்
பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப்
புதுமைக்கும் போத்தும் அப் பெற்றியனே
உன்னைப்
பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார்
தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர்
ஆவர் அவர்உகந்து
சொன்ன பரிசே
தொழும்பாய்ப் பணி செய்தோம்
இன்ன வகையே
எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும்
இலோம்ஏலார் எம்பாவாய். 163
பாதாளம்
ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார்
புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால்
திருமேனி ஒன்று அல்லன்
வேதமுதல்
விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன்
தொண்டர்உளன்
கோதில் குலத்தான்
றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர்
ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார்
ஏதவரைப் பாடும்
பரிசேலார் எம்பாவாய். 164
மொய்யார் தடம்
பொய்கை புக்கு முகேர்என்னக்
கையாற் குடைந்து
குடைந்துஉன் கழல்பாடி
ஐயா வழியடி யோம்
வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்
செய்யா
வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல்
மையார் தடங்கண்
மடந்தை மணவாளர்
ஐயாநீ ஆட்கொண்டு
அருளும் விளையாட்டின்
உய்வார்கள்
உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோங்
எய்யாமற்
காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165
ஆர்த்த பிறவித்
துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்
றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும்
குவலயமும் எல்லாமும்
காத்தும்
படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும்
பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய
அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும்
பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி
இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166
பைங்குவளைக்
கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம்
குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவு
வார் வந்து சார்தலினால்
எங்கள்
பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கும் மடுவில்
புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச்
சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள்
பொங்கப் குடையும் புனல்பொங்கப்
பங்கயப்
பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167
காதார் குழையாடப்
பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட
வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச்
சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி
அப்பொருளா மாபாடி
சோதித்திறம்பாடி
சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி
அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை
வளர்த்துஎடுத்த பெய்வதைதன்
பாதத் திறம்பாடி
ஆடேலோர் எம்பாவாய். 168
ஓரொருகால்
எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாய்
ஓவாள் சித்தம் களிகூர
நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால்
வந்தனையான் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு
இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர்
இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வாருருவப்
பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப்
பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169
முன்னிக் கடலைச்
சுருக்கி எழுந்துஉடையான்
என்னத் திகழ்ந்து
எம்மை ஆளுடையான் இட்டிடையின்
மின்னப் பொலிந்து
எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ்
சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி
நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பரிவிலா
எங்கோமான் அன்பர்க்கு
முன்னி
யவன்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய்
மழையேலோர் எம்பாவாய். 170
செங்க ணவன்பால்
திசைமுகன் பால் தேவர்கள் பால்
எங்கும் இலாதோர்
இன்பம்நம் பாலதாக்
கொங்குஉண்
சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம்
இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப்
பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கள் அரசை
அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள்
பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப்
பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171
அண்ணாமலையான்
அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர்
முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்
கண்ணார் இரவி
கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார்
ஒளிமயங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய்
அலியாய்ப பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி
இத்தனையும் வேறாகித்
கண்ணார் அமுதமாய்
நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்
பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172
உங்கையிற் பிள்ளை
உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல்
புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான்
உனக்கென்று உரைப்போம் கேள்
எங்கொங்கை
நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை
உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல்
பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே
எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென்
ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173
போற்றி அருளுக
நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக
நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா
உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா
உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா
உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால்
நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம்
உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம்
மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174
திருச்சிற்றம்பலம்